- ரஜினியும் கமலும் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள்? , அஜித்தும் விஜய்யும் எப்போது இணைந்து நடிப்பர்கள்? என்பது இதுவரையிலும் கேள்விக்குறியை தாங்கியபடியே நிற்கின்றன.
- ரஜினியும் கமலும் இணைந்து அபூர்வ ராகங்கள், அலிபாபாவும் அற்புதவிளக்கும், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது உட்பட பல படங்களில் நடித்துள்ளனர். அதேபோல் அஜித்தும் விஜய்யும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
- ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை. இப்போதைய தமிழ் சினிமாவில் டாப்
ஹீரோக்களாக அஜித், விஜய் இருப்பதால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும்
படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அஜித், விஜய்
இருவரும் ரஜினி, கமல் சொல்வது போல் கதை எனக்கும், அவருக்கும் பிடித்து
நேரமும் கூடிவந்தால் கண்டிப்பாக நடக்கும் என்று கூறுகின்றனர்.
கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் - டாப்பிக்கை கையில் எடுத்திருப்பவர், அஜித்தை வைத்து அமராவதி படம் எடுத்த இயக்குனர் செல்வா தான். ரஜினி, கமல் நடித்திருந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் செல்வா.
- தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தி முதல் படத்தையே வெற்றியடையச் செய்த இயக்குனர் என்கிற முறையில் அவர் ரீமேக் செய்யும் இந்த படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டுள்ளாராம். நினைத்தாலே இனிக்கும் படத்தில் கமல் நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் முன்வந்திருப்பதாக தெரிகிறது.
- தமிழ் சினிமா ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இயக்குனர் செயல்பட்டால் அடுத்ததாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடக்கும் என்பது கோடம்பாக்கத்து தகவல்.
Friday, 18 May 2012
விஜயுடன் இணைந்து நடிக்க அஜித் ரெடி!!
Friday, 4 May 2012
அஜித்துக்கு ஆதரவு!
- ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘துப்பாக்கி’ திரைப்படத்தை ‘வீ கிரியேன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
துப்பாக்கி படத்தின் விளம்பர போஸ்டர்கள் 1.5.2012 அன்று விளம்பரப்படுத்தப்பட்டன. இத்திரைப்படம் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தால் விநியோகம்
செய்யப்படவுள்ளது. - ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
- திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மத்திய திரைப்பட தணிக்கைக்குழு என திரைப்படம் தொடர்பான அனைத்து அமைப்புகளுக்கும் 29.11.2011 அன்று தமிழ்நாடு அரசின் பொதுச் சுகாதாரத்துறை எழுதிய கடிதத்தில்
- திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண்
அரசாணை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.26-03-2012 அன்று கேரள
உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திரைப்படங்களில் புகைபிடிக்கும்
காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை
செயல்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளது. - இந்நிலையில் பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் சௌமியா அன்புமணி கொடுத்துள்ள புகாரில் “ இவ்வாறாக, நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத் துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை
- கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படிக் குறறம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது
- அதிர்ச்சி அளிக்கிறது. எனவே ‘துப்பாக்கி’ திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குநரும், நடிகரும் இத்திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய அரசு புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை முழுமையாக பின்பற்ற வேண்டும்
- என்றும் பசுமைத் தாயகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். அஜித் நடித்த அசல் படத்திலும் இதேபோல் புகையிலை பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அஜித் படத்திற்கு வராத பிரச்சனை விஜய் நடித்துள்ள படத்திற்கு வந்துள்ளது.
சென்னை பாபா கோயிலில் தரிசனம் பெற்றார்
- சென்னை வளசரவாக்கம் காமகோடி நகரில் ஸ்ரீவிஸ்வரூப ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டு உள்ளது. சினிமா தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் இந்த கோவிலை கட்டி உள்ளார். ஆகம விதிகளின்படி இக்கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.
- 9 அடி உயர விஸ்வரூப பாபா படமும் அனுகுயாவின் கதையை பறைசாற்றும் தத்தோத்திரா படமும் கோவிலில் உள்ளது.
இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. - ஷீரடியில் இருந்து வந்திருந்த சிறப்பு அர்ச்சகர்கள் அங்கிருந்து கொண்டு வந்த விசேஷ நீரினால் சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இயக்குனர்கள் விஷ்ணு வர்த்தன், மனோஜ் குமார், தயாரிப்பாளர்கள் சஞ்சய் வாத்வா, டி.என்.எஸ்., கதாசிரியர் சுபா, சுரேஷ் சந்திரா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Tuesday, 1 May 2012
அஜித் வேண்டுகோள்!!
- நடிகர் அஜித் நேற்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு:-
- எனது 20 வருட சினிமா வாழ்க்கையில் நிறைய நல்ல படங்களில் நடித்துள்ளேன். மோசமான படங்களிலும் நடித்துள்ளேன். நல்ல முடிவுகள் எடுத்தது உண்டு. மோசமான முடிவுகளையும் எடுத்தேன். அற்புதமான மனிதர்களையும் சந்தித்து இருக்கிறேன். இதன் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இவை என்னை செதுக்கி உள்ளது.
- கடந்த கால நிகழ்வுகள் பற்றி எந்த வருத்தமும் கிடையாது. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்பதை நான் நம்புகிறேன். எனக்கு பெரிய லட்சியங்கள் கிடையாது. வாழ்க்கை என்பது பெரிய பரிசு.
- ஆக்கப்பூர்வமாக வாழ ஆசைப்படுகிறேன். நான் யாருக்கும் போட்டியும் இல்லை. நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் உள்ளது என்பதை நான் நம்புகிறேன்.
- எனவே நமக்கு கிடைப்பது கிடைக்கும். ஏன் கவலைப்பட வேண்டும். படத்தின் வெற்றிக்கான பார்முலா தெரிந்தால் எல்லோருமே 100 சதவீத ஹிட் கொடுக்க முடியும். ஒரு படம் ஜெயிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளது. அது கூட்டு முயற்சி. படங்களை தேர்வு செய்ய இயக்குனர், தயாரிப்பாளர்களுடனான புரிதல் முக்கியம். கதையும் முக்கியமானது. படத்தை முடிவு செய்த பின் எதிலும் நான் தலையிடமாட்டேன். நான் உணர்வு பூர்வமாக பேசுகிறேன். நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று கிடையாது. அரசியல் ரீதியாக இது சரி இல்லாமல் இருக்கலாம். அது என் குற்றம் இல்லை.
- அஜித்துக்கும் எனக்கும் தொழில் முறை போட்டிதான் உள்ளது என்றும், சினிமாவுக்கு வெளியே நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றும் விஜய் சொல்லி இருப்பது உண்மைதான்.
- விஜய் மனைவி சங்கீதாவும் என் மனைவி ஷாலினியும் நட்புடன் பழகுகிறார்கள். இருவர் குழந்தைகளும் ஒன்றாக இருக்கின்றனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ரசிகர்கள் ஒருத்தரை ஒருத்தர் பற்றி தவறாக கருத்துக்கள் வெளியிடுவது மனதை புண்படுத்துகிறது. சாதாரண மனிதன் இதை பார்க்கும்போது முகம் சுளிக்கிறான். எனவே இவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
- மனைவி ஷாலினி எல்லா விஷயங்களிலும் எனக்கு உதவியாக இருக்கிறார். சினிமா சம்பந்தமாக நான் எடுக்கும் முடிவுகளில் தலையிடுவது இல்லை. நான் நன்றாக சமைப்பேன். எனது அம்மா சிறு வயதில் இருந்தே சமையல் கற்று கொடுத்து உள்ளார்.
- இவ்வாறு அஜீத் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)