Earn Money 9000 upto.. click it...

Saturday, 15 October 2011

‘இந்தியன் பார்ட்-2′: அஜித்தை நடிக்க வைக்க ஏ.எம்.ரத்னம் மும்முரம்!

ஷங்கரின் படைப்புகளிலேயே அதிக கவுரவத்திற்குரிய படம் ‘இந்தியன்’தான். அப்படத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்திருந்தார் கமல். ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எதிராக இந்தியன் தாத்தா போட்ட ஃபைட் அதன்பின் வேறெந்த படங்களிலும் அவ்வளவு தத்ரூபமாக வெளிப்பட்டதா என்றால், படு திமிரோடு சொல்லலாம் இல்லை என்று. க்ளைமாக்சில் முன் தலையில் முடிக் கற்றையை ஸ்டைலாக நீவியபடியே வெளிநாட்டு வீதியொன்றில் நடந்து போகும் இந்தியன் தாத்தா, சொல்லாமல் சொன்ன விஷயம்… இப்படத்தின் செகன்ட் பார்ட் சீக்கிரம் வரப்போகிறது என்பதைதான். அது சீக்கிரம் நடக்கவில்லை என்றாலும் சில வருடங்கள் கழித்து நடக்கவிருக்கிறது.

ஆனால் அதில் நடிக்கிற அதிர்ஷ்டம் கமலுக்கு இல்லை என்பதுதான் சோகம். மாறாக அஜித்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது அந்த வாய்ப்பு. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் ‘இந்தியன் பார்ட்-2′வாக இருக்கலாம் என்று சுடச் சுட தகவலை கசிய விடுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

சம்பந்தப்பட்ட இடத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் செய்திகள் யாதெனில், ‘இந்தியன்’ படத்தை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம் என்பதால் இப்படத்தின் தொடர்ச்சியை எடுக்கிற உரிமையும் அவருக்கே உரித்தானது. அதனால் மிக எளிதாக இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் அவர் என்பதுதான்.

இதை ஷங்கரே எடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்பது ரத்னத்தின் விருப்பம். இது தொடர்பாக அவர் ஷங்கரிடமும் பேசி வருகிறாராம். ‘ஜீன்ஸ்’ படத்திலேயே முதலில் அஜித்தை நடிக்க வைக்கதான் நினைத்தார் ஷங்கர். அப்போது கைகூடவில்லை அந்த முயற்சி. போகிற போக்கை பார்த்தால் இப்போது நிறைவேறிவிடும் போலிருக்கிறது.

No comments:

Post a Comment