Earn Money 9000 upto.. click it...

Friday, 23 March 2012

அஜித் படம் வெளி வருவதில் புதிய சிக்கல்

  • எப்பவுமே மே 1 ந் தேதியான தனது பிறந்த நாளில் தன்னோட படங்களை ரிலீஸ்செய்வதில் ஆர்வம் காட்டும் அஜீத்துக்கு, இந்த முறை அந்த ஆசை கை கூடாது போலிருக்கிறது. வேக வேகமாக பில்லா-2ஐ உருவாக்கிக் கொண்டிருந்தாலும் மே இறுதியில்தான் படத்தை வெளியிட முடியுமாம்.
  • ரிலீஸ் எப்ப வேணா ஆகட்டும். படத்தை இப்ப கொடுத்திருங்க என்று கால்கடுக்க காத்திருக்கும் ஹோல்சேல் விநியோகஸ்தர்களில் அதிகமுக்கியமானவராக கருதப்படுகிறார் பாரிவேந்தர். சினிமாவுக்குள் ‘புதிய தலைமுறை’யாக அடியெடுத்து வைத்திருக்கும் இவரை குபேர மூலையாக நினைத்து கும்பிட ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
  • அப்படிப்பட்டவருக்கு பில்லாவை கொடுக்க சம்மதித்த தயாரிப்பு தரப்பு பெரும் விலை சொல்கிறதாம். அதற்கும் தயாராகிவிட்டார் வேந்தர். ஆனால் ஒரு சிக்கல். படத்தின் கான்சப்ட் மற்றும் சண்டை காட்சிகளை கருத்தில் கொண்டால் நிச்சயம் ஏ தான் கிடைக்குமாம். ஏ சர்டிபிகேட் படங்களுக்கு 30 சதவீத வரியை தனியாக செலுத்த வேண்டும். இந்த வரிக்காகவாவது விலையை குறைச்சுக்க கூடாதா என்கிறார்களாம் வேந்தர் தரப்பில்.

குழப்பத்தில் அஜித்?

  • ஹிந்திப்படம், சைப் அலிகான் நடித்து பெரும் வெற்றிபெற்ற த்ரில்லர் படம். இப்படத்தைத் தமிழில் எடுக்க உள்ளனர். இதில் அஜித்தை வைத்து இயக்க மூன்று இயக்குநர்களிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
  • அஜித் தற்போது நடித்துவரும் “பில்லா-2′ படம் முடிவடையும் நிலையில் உள்ளது. அடுத்து “சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதையடுத்து விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க உள்ளார். இதனால் “ரேஸ்’ படத்தை விஷ்ணுவர்தனிடம் தரலாமே என யோசனை சொன்னராம் “சிறுத்தை’ சிவா.
  • ஆனால் “மங்காத்தா’ இயக்குநர் வெங்கட் பிரபுவை சொன்னாராம் அஜித். படத்தைத் தயாரிக்கும் மும்பை நிறுவனமோ பிரபுதேவா இயக்கினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறதாம். இயக்குநர் ரேஸில் முந்தப்போவது யாரோ?

Friday, 2 March 2012

அஜீத் படத்தில் நயன்தாரா போட்ட நிபந்தனை

  • நயன்தாராவின் இந்த திடீர் பாலிஸியால் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தின் துணைக்கோள்கள் அத்தனையும்.
  • வருகிற ஏப்ரல் மாதம் முழுக்க சென்னையிலிருக்கும் பிரபல ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டிருக்கிறாராம் நயன்தாரா. இங்கிருந்து கொண்டுதான் எல்லாவற்றையும் ஆபரேட் செய்யப் போகிறார் அவர். அஜீத் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா கமிட் ஆகிவிட்டார் என்ற தகவலிலும் உண்மையில்லையாம்.
  • ஐயய்யோ… அப்புறம்?
  • இந்த படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை அணுகிய தயாரிப்பு தரப்பிடம் நயன்தாரா போட்ட ஒரே நிபந்தனை இதுதான். அஜீத்துடன் நடிக்க எனக்கு விருப்பம்தான். அதற்காக நீங்க கேட்கிற தேதியை அப்படியே மாதக்கணக்கில் என்னால கொடுக்க முடியாது. அவர் இந்த படத்திற்காக என்ன தேதி கொடுத்திருக்கிறார் என்று முதலில் சொல்லுங்க. அதுக்கேற்ற மாதிரி என் தேதிகளை ஒதுக்குகிறேன் என்றாராம்.
  • அலசி பிழிந்து கொண்டிருக்கிறார்கள். தேதிகள் திருப்தியானால் மட்டுமே அஜீத் படத்தில் இருப்பார் நயன்தாரா.