Earn Money 9000 upto.. click it...

Friday, 23 March 2012

அஜித் படம் வெளி வருவதில் புதிய சிக்கல்

  • எப்பவுமே மே 1 ந் தேதியான தனது பிறந்த நாளில் தன்னோட படங்களை ரிலீஸ்செய்வதில் ஆர்வம் காட்டும் அஜீத்துக்கு, இந்த முறை அந்த ஆசை கை கூடாது போலிருக்கிறது. வேக வேகமாக பில்லா-2ஐ உருவாக்கிக் கொண்டிருந்தாலும் மே இறுதியில்தான் படத்தை வெளியிட முடியுமாம்.
  • ரிலீஸ் எப்ப வேணா ஆகட்டும். படத்தை இப்ப கொடுத்திருங்க என்று கால்கடுக்க காத்திருக்கும் ஹோல்சேல் விநியோகஸ்தர்களில் அதிகமுக்கியமானவராக கருதப்படுகிறார் பாரிவேந்தர். சினிமாவுக்குள் ‘புதிய தலைமுறை’யாக அடியெடுத்து வைத்திருக்கும் இவரை குபேர மூலையாக நினைத்து கும்பிட ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
  • அப்படிப்பட்டவருக்கு பில்லாவை கொடுக்க சம்மதித்த தயாரிப்பு தரப்பு பெரும் விலை சொல்கிறதாம். அதற்கும் தயாராகிவிட்டார் வேந்தர். ஆனால் ஒரு சிக்கல். படத்தின் கான்சப்ட் மற்றும் சண்டை காட்சிகளை கருத்தில் கொண்டால் நிச்சயம் ஏ தான் கிடைக்குமாம். ஏ சர்டிபிகேட் படங்களுக்கு 30 சதவீத வரியை தனியாக செலுத்த வேண்டும். இந்த வரிக்காகவாவது விலையை குறைச்சுக்க கூடாதா என்கிறார்களாம் வேந்தர் தரப்பில்.

No comments:

Post a Comment