- யுவன் சங்கர் ராஜா அடுத்து சொந்தப் படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் நாயகன் அஜீத்.
- சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த்
கிருஷ்ணா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் ஒயிட் எலிபேன்ட் என்ற
திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர்.
பின்னர் அவர்களின் நட்பில் விரிசல் விழ, அந்த நிறுவனம் சார்பாக ஒரு படம் கூட தயாரிக்காமல் பெயரளவிலேயே இருந்தது. இதனிடையே மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜீத் குமாருடன் மீண்டும் இணைய போவதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்தார். - ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை அவர் ரகசியமாக வைத்திருந்தார்.
இப்போது அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யுவன் சங்கர் ராஜாதான் என்று தெரிய வந்துள்ளது. - அஜீத் குமார், வெங்கட் பிரபு மீண்டும் இணைய போகும் படத்தை ஒய்ட் எலிபேன்ட் பேனரில் தயாரிப்பார்களா என்பது விரைவில் முடிவாகிவிடும்.
இந்த படத்துக்கு இசையமைப்பவர் யுவன்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா!
Thursday, 5 April 2012
“அஜித்தின்” அடுத்தப் படம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment