Earn Money 9000 upto.. click it...

Saturday 14 April 2012

சினிமாவில் தான் அஜித்துக்கும் எனக்கும் போட்டி...! விஜய் பேட்டி!!


  • சினிமாவில் தான் அஜித்தும், நானும் நீயா-நானா...? என்று போட்டி போடுவோம் மற்றபடி நாங்கள், நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். பல்வேறு தடைகளை கடந்து இன்று, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கும் நடிகர் விஜய், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, பொதுவாக எல்லா ஹீரோக்களும் ரொமான்ட்டிக்கில் இருந்து அதிரடிக்கு மாறுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படியே மாறியிருக்கிறது. எனது சினிமா கேரியரில் இடைப்பட்ட காலத்தில் தான் ரொமான்ட்டிக் ரோலில் நடித்து, இப்போது ஆக்ஷ்ன் ஹீரோவாக மாறியிருக்கிறேன். எனக்கு காமெடி கலந்த ரொமான்ஸ் காட்சியில் தான் நடிக்க ஆசை, ஆனால் இன்றைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து கமர்ஷியலில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.

    மேலும் சினிமாவில் தனக்கு யார் போட்டி என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய், ரஜினி-கமல் ஆகியோரைத் தொடர்ந்து எனக்கும், அஜித்துக்கும் போட்டி என்று பலரும் கூறுகிறார்கள். சினிமாவை பொறுத்த வரைக்கும் அஜித்துக்கும், எனக்கும் நீயா - நானா...? என்று போட்டி நடக்கும், மற்றபடி நானும் அஜித்தும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வோம். நான் அவருடைய வீட்டிற்கும், அவர் என்னுடைய வீட்டிற்கும் வருவது உண்டு. எங்களைப் போலவே எங்கள் இருவரது குழந்தைகளும் நல்ல நண்பர்களாய் இருக்கிறார்கள். சினிமாவில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தானே.

Thursday 12 April 2012

முதல் எபிக் கேமராப் படம் அஜித்தின் பில்லா -2



  • அஜித் நடித்து வரும் ‘பில்லா 2′ படத்தில் எபிக் என்ற புதுவகை கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் ஆசியாவிலேயே இந்த கேமராவை பயன்படுத்திய முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘பில்லா 2′ படம் பெற்றிருக்கிறது.
  • அஜித்தின் ‘பில்லா’ படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து ‘பில்லா 2′-வை மிக பிரமாண்டமாக எடுத்து வருகிறார்கள். இதில் சாதாரண மனிதனான ஒருவர் எப்படி பில்லாவானான் என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
  • ‘பில்லா 2′ முழுக்க முழுக்க அஜித்தை மையமாக வைத்து பின்னப்பட்டிருப்பதால் அஜித்தின் தோற்றமும் நடிப்பும் பேசும்படி இருக்கும்.
  • இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தை இயக்கியிருக்கிறார். அமெரிக்காவில் திரைப்பட தொழில்நுட்பம் படித்துப் பட்டம் பெற்றவர்.
  • ஹீரோயின்களாக பார்வதி ஒமணக்குட்டனும், பிரேசில் நாட்டு மாடலான ப்ரூனா அப்துல்லாவும் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஆசியாவிலேயே இதுவரை எந்த திரைப்படத்திற்கும் பயன்படுத்தாத எபிக் (Epic) கேமராவை பயன்படுத்தி முழுப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.
  • அதீநவீன தொழில்நுட்பத்தின் அடையாளமாக திகழும் எபிக் கேமராவின் மூலம் முழுக்க முழுக்க டிஜிட்டல் படமாக உருவாகியிருக்கிறது 

Thursday 5 April 2012

“அஜித்தின்” அடுத்தப் படம்

  • யுவன் சங்கர் ராஜா அடுத்து சொந்தப் படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் நாயகன் அஜீத்.
  • சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் ஒயிட் எலிபேன்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர்.
    பின்னர் அவர்களின் நட்பில் விரிசல் விழ, அந்த நிறுவனம் சார்பாக ஒரு படம் கூட தயாரிக்காமல் பெயரளவிலேயே இருந்தது. இதனிடையே மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜீத் குமாருடன் மீண்டும் இணைய போவதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்தார்.
  • ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை அவர் ரகசியமாக வைத்திருந்தார்.
    இப்போது அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யுவன் சங்கர் ராஜாதான் என்று தெரிய வந்துள்ளது.
  • அஜீத் குமார், வெங்கட் பிரபு மீண்டும் இணைய போகும் படத்தை ஒய்ட் எலிபேன்ட் பேனரில் தயாரிப்பார்களா என்பது விரைவில் முடிவாகிவிடும்.
    இந்த படத்துக்கு இசையமைப்பவர் யுவன்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா!