- தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வரும் ராணா, சில தமிழ் படங்களில் நடிக்க முன்வந்தும், இறுதி கட்டத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது.
- இதனால் தெலுங்கில் 'வேதம்' ( தமிழில் 'வானம்') படத்தின் இயக்குனர் க்ரிஷ் இயக்கி வரும் அடுத்த படத்தில் ராணா மற்றும் நயன்தாரா நடித்து வருகிறார்கள். இப்படம் தனது நேரடி தமிழ் படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஒரே சமயத்தில் தமிழிலும் இப்படத்தினை இயக்கி வருகிறார் க்ரிஷ். தமிழில் இப்படத்திற்கு பெயர் 'ஓங்காரம்'.
- வெற்றிமாறன் - சிம்பு இணையும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ராணாவிடம் பேசி வந்தார்கள். இறுதியில் அப்படத்தில் இருந்து விலகினார் ராணா. வெற்றிமாறன் - சிம்பு படம் எப்போது தொடங்கும் என்பது அவர்களுக்கே தெரிந்த உண்மை.
- இந்நிலையில் அஜீத் - விஷ்ணுவர்தன் இணையும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ராணா. இதற்கான அஜீத் - ராணா படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது.
- இப்படத்தில் ராணா சம்பந்தப்பட்ட காட்சிகளை 3 முதல் 4 நாட்களில் முடிக்க இருக்கிறார்கள்.
- அஜீத், நயன், ஆர்யா, டாப்ஸி, அதுல் குல்கர்னி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தில், ராணாவும் புது நட்சத்திரமாக இணைந்து இருக்கிறார்.
Monday, 30 July 2012
அஜீத்தோடு ராணா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment