Earn Money 9000 upto.. click it...

Wednesday, 27 June 2012

பில்லா 2 ஜுலை 13ம் தேதி முதல்...!

 
தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 'பில்லா 2' படம் ஜுலை 13ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

அஜீத், பார்வதி ஒமணக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்தினை சக்ரி டோல்டி இயக்கி இருக்கிறார்.

'பில்லா 2' படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பில்லா 2 படம் உலகம் முழுவதும் சுமார் 1200 திரையரங்குகளில் ஜுலை 13ம் தேதி வெளியாகிறது.

ஜுலை முதல் வாரத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம். அதில் 'பில்லா 2' படத்தின் first lookஐ வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். ஜுலை 1 அல்லது 2ம் தேதி இந்த விழா இருக்கும்.

அதற்கு பிறகு படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும். 'பில்லா 2' ஒரே சமயத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் வெளியாகிறது.

ஆந்திராவில் ' டேவிட் பில்லா - the beginning ' என்ற பெயரில் வெளியாகிறது. மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 'பில்லா 2' படம் அந்தந்த நாட்டு சப் -டைட்டிலுடன் வெளியாகிறது." என்று தெரிவித்து இருக்கிறார்.

No comments:

Post a Comment