Earn Money 9000 upto.. click it...

Tuesday, 28 February 2012

பில்லா 2 படத்தில் நயன்தாரா

பில்லா படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தார் நயன்தாரா. இந்நிலையில் பில்லா 2 படத்தில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கெஸ்ட் ரோலில் வந்து செல்லக்கூடும் என்று கூறப்படுகின்றது.
திரையுலகை விட்டு விலகியிருந்த நயன்தாரா பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நயன் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பில்லா 2 படத்திலும் நயன் வரவிருக்கிறார். அப்படியென்றால் அடுத்தடுத்து 2 படங்களில் தல-நயன் ஜோடியைப் பார்க்கலாம்.
இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். இதில் அஜீத்தும், தூக்குடு தெலுஙகு படம் மூலம் பிரபலமான மீனாக்ஷி தீக்ஷிதும் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ள குத்துப்பாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Friday, 24 February 2012

எப்போது தியேட்டர்களைத் தாக்கும் பில்லா 2

அஜித்தின் அடுத்த அதிரடியான ‘பில்லா 2′ தமிழகம் தொடங்கி ஐரோப்பா வரையிலும் 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டைட்டில் பாடலுடன் ஒரு வார ‘பேட்ச் ஒர்க்’ மட்டுமே மீதமிருக்கும் நிலையில் ‘பில்லா 2′ பட பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அற்புதமாக வந்துள்ளதாக படக்குழுவை சேர்ந்தவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி எப்போது பில்லா 2 தியேட்டர்களைத் தாக்கும்..?” என்றால், “ஏப்ரல் 2012…” என்கிறார் தெளிவாக

Saturday, 18 February 2012

பில்லா 2

பில்லா 2 படத்தில் அஜித் எந்த சண்டை காட்சிக்கும் டூப் போடாமல் நடித்துள்ளார். இதில் குறுப்பிடத்தக்க சண்டை காட்சி என்னவென்றால் ஹெலிகாப்ட்டர் சண்டை காட்சி தான்.

ஹெலிகாப்ட்டர் சண்டை காட்சி ஜார்ஜியாவில் படமாகபட்டுள்ளது இதில் அஜித் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் மற்றும் அஜித் ஒரு கடுமையான உழைப்பாளி என்று படத்தின் இயக்குனர் சக்ரி டோலேட்டி தெரிவித்தார்.

Saturday, 11 February 2012

பில்லா 2

அஜித்தின் பில்லா 2 படம் விரைவில் ரிலீஸ் ஆகபோகிறது இது ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்னொருபுறம் யுவன் சங்கர் ராஜா பில்லா 2 விற்காக புது விதமான இசை அமைத்துள்ளார். பில்லா முதல் பாகத்தை விட பில்லா 2 வின் இசை ரசிகர்களை அமர்களபடுத்த போகிறது.
தற்போது யுவன் சங்கர் ராஜா பில்லா 2 பாடல்களை பற்றி கூறியதாவது , பில்லா 2 பாடல்கள் அனைத்தும் மிக நன்றாக வந்துள்ளது. இதில் ஒரு மெலடி பாடல் இடம் பெறுகிறது எனக்கு மிகவும் பிடித்த 7 G ரெயின்போ காலனி பாடலை விட இப்பாடல் மிகவும் பிடித்திருகிறது.

Friday, 10 February 2012

பிரம்மாண்டத்தின் மறுபக்கமாக பில்லா 2 அமையும்

பில்லா 2 திரைப்படத்தை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.கொலிவுட்டில் தல அஜீத்குமார், பார்வதி ஒமணக்குட்டன் நடிக்கும் பில்லா 2 திரைப்படத்தை சக்ரி டோலட்டி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் மாதம் இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். பில்லா 2 படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாகவும் ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அஜீத் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் இயக்குனர் படமாக்கியுள்ளார். இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகொப்டர் சண்டைக்காட்சியை போன்று பில்லா 2 படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள். ஹெலிகொப்டர் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் அஜீத்குமார் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பு அஜீத்குமார் நடித்து வெளிவந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் பில்லா 2 வெளிவர இருக்கிறது. பில்லா 2 திரைப்படத்தை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.கொலிவுட்டில் தல அஜீத்குமார், பார்வதி ஒமணக்குட்டன் நடிக்கும் பில்லா 2 திரைப்படத்தை சக்ரி டோலட்டி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் மாதம் இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். பில்லா 2 படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாகவும் ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அஜீத் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் இயக்குனர் படமாக்கியுள்ளார். இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகொப்டர் சண்டைக்காட்சியை போன்று பில்லா 2 படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள். ஹெலிகொப்டர் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் அஜீத்குமார் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பு அஜீத்குமார் நடித்து வெளிவந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் பில்லா 2 வெளிவர இருக்கிறது.

Thursday, 9 February 2012

தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியல் எதுக்குங்க

தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.
ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.
அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.
எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!” என்று கூறியுள்ளார்.

Wednesday, 8 February 2012

"Yes, I'm Selfish" : Ajith's Exclusive Interview


அஜித்க்கு வில்லியாக நடிக்க போகும் அமலா பால்

அஜீத்தின் அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விஷ்ணுவர்தன்.  இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
படத்தில் அஜீத்தின் நாயகி யார், மற்றவர்கள் யாரெல்லாம்  நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
அஜீத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. சம்பளமாக 1.5 கோடி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதாம்.  அஜீத் – நயன்தாரா – விஷ்ணுவர்தன் ஆகிய மூவரும் ஏற்கனவே ‘பில்லா’ படத்தில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்.
அஜீத் – நயன்தாரா ஜோடி இல்லாமல் படத்தில் இன்னொரு ஜோடியும் இருக்கிறது. ‘ வேட்டை’ பட ஜோடியான ஆர்யா – அமலாபால் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்களாம்.
ஆர்யாவை ஒப்பந்தம் செய்துவிட்டு அவருக்கு ஜோடி யார் என்று விஷ்ணுவர்தன் ஆலோசித்து கொண்டிருந்தாராம். அவரிடம் அமலா எனக்கு ஜோடியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆர்யா கூறினாராம்.
ஆர்யா – விஷ்ணுவர்தன் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் நண்பனின் வேண்டுகோளுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார் விஷ்ணுவர்தன்.
இப்படத்தில் அமலா பால் நெகடிவ் ரோலில் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின்றன

Monday, 6 February 2012

அஜித்துடன் நடிக்க நயன்தாரா கேட்கும் புதிய சம்பளம்

நயன்தாரா- பிரபுதேவா காதல் முறிந்துள்ளது. பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்க நயன்தாரா திட்டமிட்டார். கடைசி படமான ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ படப்பிடிப்பு இறுதி நாளில் அனைவரையும் கும்பிட்டப்படி கண்ணீரோடு விடைபெற்றார்.
இந்துவாக மதம் மாறவும் செய்தார். ஆனால் பிரபுதேவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டு திருமணத்துக்கு தயங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடனான காதலை உதறிவிட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு படமொன்றில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழில் அஜீத்துடன் நடிக்க உள்ளார். ஏற்கனவே அஜீத்துடன் பில்லா, ஏகன் படங்களில் நடித்துள்ளார். இப்போது மீண்டும் அவருடன் ஜோடி சேர்கிறார். இந்த படத்தில் ஆர்யாவும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். இவரும் நயன்தாராவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்துள்ளார். அப்படம் ஹிட்டானது. இவர்கள் மூவரும் இணைந்து நடிக்க உள்ள படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.
நயன்தாராவிடம் கதை சொன்னபோது அவருக்கு பிடித்து போனதாம். உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ.1 1/2 கோடி சம்பளம் பேசியுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

Saturday, 4 February 2012

அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா


பில்லா, ஏகன் படங்களுக்குப் பிறகு அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா.

பிரபு தேவாவை விட்டு நயன்தாரா பிரிந்துவிட்ட செய்தி பரவியதிலிருந்து, நயன்தாராவைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.

இத்தனை நாளும் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளைக் கூட பிரபு தேவாவுக்காக உதறிவந்த நயன்தாரா, இப்போது வாய்ப்புகளை மறுக்காமல் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அவருக்கு ரூ 1.40 சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்து தமிழில் அஜீத் ஜோடியாக நடிக்கவும் கிட்டத்தட்ட இதே சம்பளத்தில் பேசியுள்ளார்களாம் நயன்தாராவிடம். அனுஷ்காவைத்தான் முதலில் ஜோடியாக தேர்வு செய்தனர். ஆனால் தெலுங்கு படங்களில் அவர் பிசியாக இருப்பதால் வேறு நாயகி தேடினர். அஜீத்துடன் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம் கேட்டபோது, அஜீத் ஜோடியாக நயன்தாராவிடம் பேசியிருப்பது உண்மைதான். ஆனாலும் அவரிடம் இன்னும் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை, என்றார். அஜீத்தும் நயன்தாராவும் ஏற்கனவே பில்லா, ஏகன் படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

Friday, 3 February 2012

அஜித்துக்கும்-விஜய்க்கும் எதிரியான பிரபல நடிகர்


  • அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘பில்லா – 2′, விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘துப்பாக்கி’ இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

  • ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

  • ” ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. 

  • ‘பில்லா 2′ படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம். ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும். இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம். இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன்.

  • அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர். விஜய்யுடன் நடிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார்.