Earn Money 9000 upto.. click it...

Wednesday, 8 February 2012

அஜித்க்கு வில்லியாக நடிக்க போகும் அமலா பால்

அஜீத்தின் அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விஷ்ணுவர்தன்.  இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
படத்தில் அஜீத்தின் நாயகி யார், மற்றவர்கள் யாரெல்லாம்  நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
அஜீத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. சம்பளமாக 1.5 கோடி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதாம்.  அஜீத் – நயன்தாரா – விஷ்ணுவர்தன் ஆகிய மூவரும் ஏற்கனவே ‘பில்லா’ படத்தில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்.
அஜீத் – நயன்தாரா ஜோடி இல்லாமல் படத்தில் இன்னொரு ஜோடியும் இருக்கிறது. ‘ வேட்டை’ பட ஜோடியான ஆர்யா – அமலாபால் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்களாம்.
ஆர்யாவை ஒப்பந்தம் செய்துவிட்டு அவருக்கு ஜோடி யார் என்று விஷ்ணுவர்தன் ஆலோசித்து கொண்டிருந்தாராம். அவரிடம் அமலா எனக்கு ஜோடியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆர்யா கூறினாராம்.
ஆர்யா – விஷ்ணுவர்தன் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் நண்பனின் வேண்டுகோளுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார் விஷ்ணுவர்தன்.
இப்படத்தில் அமலா பால் நெகடிவ் ரோலில் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின்றன

No comments:

Post a Comment