இந்துவாக மதம் மாறவும் செய்தார். ஆனால் பிரபுதேவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டு திருமணத்துக்கு தயங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடனான காதலை உதறிவிட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு படமொன்றில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழில் அஜீத்துடன் நடிக்க உள்ளார். ஏற்கனவே அஜீத்துடன் பில்லா, ஏகன் படங்களில் நடித்துள்ளார். இப்போது மீண்டும் அவருடன் ஜோடி சேர்கிறார். இந்த படத்தில் ஆர்யாவும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். இவரும் நயன்தாராவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்துள்ளார். அப்படம் ஹிட்டானது. இவர்கள் மூவரும் இணைந்து நடிக்க உள்ள படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.
நயன்தாராவிடம் கதை சொன்னபோது அவருக்கு பிடித்து போனதாம். உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ.1 1/2 கோடி சம்பளம் பேசியுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment