- ’பில்லா 2′ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தல அஜித் நடிக்கும் 51-வது படம் ‘பில்லா 2′. பார்வதி ஓமனக்குட்டன் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தை சக்ரி டோலொட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் ‘பில்லா 2′ படத்தின் கலக்கலான போஸ்டர்கள் பொங்கல் தினத்தில் வெளியிடப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- “கையில் துப்பாக்கியுடன் கோபப்பார்வையோடு ‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இறந்த காலம் உண்டு. ஒவ்வொன்றும் வரலாறு’ என்பதை குறிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
- இந்த படத்தில் அஜித் நடிப்பை பற்றி கூறிய இயக்குநர், ‘டேவிட் என்ற சாதாரண மனிதன் தூத்துக்குடியில் இருந்து வந்து டான் பில்லாவாக எப்படி உருவாகிறார் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் அஜித் என்றார். ‘பில்லா 2′ படத்தில் மும்முரமாக நடித்து வந்ததால் அஜித் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. ‘பில்லா 2′ படத்தில் அஜித்தின் பணிகள் முடிந்த பின் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றிருந்தார். தற்போது சிங்கப்பூரில் இருந்து திரும்பி இருக்கும் அஜித், அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, 27 January 2012
பில்லா 2
Thursday, 26 January 2012
Thala pola varuma
தமக்கிருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யத்துணிபவர்களுக்கு மத்தியில், தன் பிரபல்யத்தையே ஒதுக்கி வைத்து விட்டு தானும் ஓர் சராசரி குடிமகன் தான் என்று வாழ்ந்து வருபவர்.
கீழே உள்ள படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும். வாக்களிக்க செல்லும்போதுகூட மக்களோடு மக்களாக நின்று வாக்களித்துவிட்டு வருபவர்.
கீழே உள்ள படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும். வாக்களிக்க செல்லும்போதுகூட மக்களோடு மக்களாக நின்று வாக்களித்துவிட்டு வருபவர்.
Wednesday, 25 January 2012
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘பில்லா 2′.
இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ‘பில்லா 2′. அல்டிமேட் ஸ்டார் ‘தல’ அஜித் நடிப்பில் ‘பில்லா’ வசூலில் பட்டையைக் கிளப்பியதோடு… தல அஜித்துக்கு ஒரு பிரேக்கை ஏற்படுத்தி தந்தது. இப்போது படுவேகத்தில் ‘பில்லா 2′ ஷூட்டிங் நடந்து வருகிறது. இதற்காக நம்ம தல அஜித் பல கிலோ எடைகளை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். அதுமட்டுமின்றி படத்தின் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என இயக்குநர் சக்ரி தெரிவித்துள்ளார். படம் ரிலீஸ் ஆகும் போது, தல ரசிகர்கள் உட்பட சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி தான் போல…பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக மாறிக் கொண்டிருக்கிறார் அஜித். போகிற வேகத்தைப் பார்த்தால் இவரது படங்களின் பட்ஜெட்டை படம் வெளிவரும் முன்பே தயாரிப்பாளர்கள் வசூலித்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. ‘பில்லா 2′ படத்தின் போஸ்டரைதான் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்குள் படத்தின் வெளிநாட்டு உரிமை விலை போயிருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட விலை? மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள். அதிகமில்லை ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள்
Tuesday, 24 January 2012
ஆஸ்கார் விருதுக்கு குறிவைத்த அஜித்
ஆஸ்கார் அவார்டைக் குறிவைத்து தயாரிக்கப்படும் படத்தில், கமல் நடிக்கிறார். அதே படத்தில் ‘தல’யை நடிக்கவைக்கும் முயற்சி ந்டந்துகொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல், மோகன்லால் மற்றும் ரவிதேஜாவும் நடிக்கிறார்கள். தலைவனும் தலயும் இணையப்போகும் இந்தப்படம் நிச்சயம் பெருத்த வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sunday, 22 January 2012
பில்லா 2 படத்தை கட்டுபடுத்திக்கொண்டு காத்திருக்க முடியாது
- கடந்த 2011 ஆம் ஆண்டின் நம்பர் ஒன் வெற்றி படமாக அமைந்த “மங்காத்தா” வை தொடர்ந்து வெளி வர இருக்கும் தலயின் 51 வது படமான பில்லா 2 பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதோடு,சுமார் 5 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு உரிமையை பெற்று இருக்கிறது G.K Media என்கிற அமெரிக்க நிறுவனம்.
- கமலின் முழு கட்டுப்பாட்டில் இருந்த ‘உன்னை போல் ஒருவன்’ படத்தை இயக்கினாலும், என்னை பொறுத்தவரை சக்ரி டோலேடி அவர்களுக்கு முழு சுதந்திரத்துடன் பணியாற்றிவரும் “பில்லா 2 ” தான் முதல் படம்.
- “II” மட்டுமே தோன்றும் ஒரு லோகோவை முதல் விளம்பர போஸ்டராக போட்டு, அனைவருக்கும் ‘பில்லா 2′ என கொண்டு சென்றது சக்ரிக்கு ஒரு விசிடிங் கார்டு என்று சொல்லலாம்.
- முதல் பாகத்தில் மிகவும் பிரபலமான தீம் இசையை பயன்படுத்தாமல், பில்லாவின் இரண்டாம் பாகத்திற்கு தனிப்பட்ட தீம் இசையை உருவாக்கி வருவதாக கூறி இருக்கிறார் அஜித்தின் லக்கி இசை அமைப்பாளர் யுவன். அடுத்த அஜித்தின் இரண்டு படங்களுக்கும் இவரே இசை அமைப்பாளர் என்றும் தெரிகிறது.
- படத்தின் ஒரு ப்ரோமோ பாடலை இணையத்தில் வெளியிட்டு மற்ற நடிகர்கள் விளம்பரத்திற்கு படாத பாடு பட்டு வரும் இன்றைய டிரெண்டில், மூன்றே மூன்று போஸ்டர்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை படத்திற்கு கொண்டு வர இயலும் என்றால், அது தலைவர் ரஜினிக்கு பின் தலயால் மட்டுமே சாத்தியம். பில்லா 2 படத்தின் ஸ்டில்கள்.
- “பில்லா 2 ஸ்டில்களை பார்த்த பின் படம் வெளிவரும் வரை கட்டுபடுத்திக்கொண்டு காத்திருக்க முடியாது என்று தோன்றுகிறது” என்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
Friday, 20 January 2012
வித்தியாசமான அஜித்தை பார்க்க போறிங்க விஷ்ணுவர்தன் பேட்டி!
விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அஜித் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கப்போகிறாராம். இந்த தகவலை டைரக்டர் விஷ்ணுவர்தனே தெரிவித்துள்ளார். பில்லா-2 படத்திற்கு பின்னர் அஜித், விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே பில்லா படத்தின் முதல் பாகம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சிலபல காரணங்களால் பில்லா 2 படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவில்லை. இந்நிலையில் அஜீத் – விஷ்ணுவர்த்தன் ஜோடி மீண்டும் இணைகிறது.
புதிய படம் குறித்து விஷ்ணுவர்தன் அளித்துள்ள பேட்டியில், அஜித் சாரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்த பின்னர்தான் அந்தந்த பாத்திரத்திற்கு யார் பொருந்துவார் என்று தீர்மானிக்கப்படும். அதன் பிறகே அடுத்த கட்ட பணிகள் தொடங்கும். அதற்குள் பல்வேறு விதமாக செய்திகள் உலா வருகின்றன. எதிலும் உண்மையில்லை.
திரைக்கதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால்தான் மற்றவைகளில் கவனம் செலுத்துவோம், என்று கூறியுள்ளார். மேலும், இந்த புதிய படத்தில் அஜித் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.
அஜீத்திற்காக..! போர்க்களம் ' பண்டி சரோஜ்குமார்
- அஜீத்திற்கு அவரது ரசிகர்களைத் தாண்டி, திரையுலகிலும் பல நண்பர்களும் அவரது ரசிகர்களாக இருக்கின்றனர். தமிழ்த் திரையுலகினர் மத்தியில் 'ஜென்டில்மேன்' என்று சொல்லப்படும் அஜீத்திற்கு ஒரு இயக்குனரும் ரசிகராக இருக்கிறார்.
- ' போர்களம் ' படத்தின் இயக்குனர் பண்டி சரோஜ் குமார்.
- அவர் அஜீத்தைப் பற்றி தனது ஃபேஸ்புக் இணையத்தில் " யாராவது விஜய்யை விமர்சனம் செய்தால் நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன். ஆனால், யாராவது அஜீத்தைப் பற்றி விமர்சனம் செய்தால், அவர்களை எதிர்ப்பேன்.. பதிலடி கொடுப்பேன். அஜீத்திற்காக எந்த எல்லை வரையும் செல்வேன். அஜீத் நேர்மையானவர், எளிமையானவர், துணிவானவர், பொறுப்பானவர். தன்னம்பிக்கையாலும் கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர்.
- தமிழ் ரசிகர்கள் உள்ளங்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் அஜீத். நடிக்க வரும் எல்லா புதுமுகங்களுக்கும் அவர் முன்மாதிரியாக இருக்கிறார். அவர் பெரிய நடிகர் இல்லை, நன்றாக நடனம் ஆடத் தெரிந்தவர் இல்லை, அவரது சில படங்கள் மட்டுமே பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளன. ஆனாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு அஜீத் தான் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். நீங்கள் திரைத்துறையில் இருந்தால் மட்டுமே அவரது பெருமைகளை உணர முடியும். நான் அவர் அருகில் இருந்து அவரை ரசித்தவன். " என்று கூறியுள்ளார்
Thursday, 19 January 2012
டைம்ஸ் ஒப் இந்தியாவில் தல அஜித்
டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிக்கை வெளியிட்ட இந்தியாவின் சிறந்த பத்து ஆண்கள் வரிசையில் இடம்பிடித்தது , திரையுலகில் அம்பது படங்களை தாண்டியது என்று இன்னும் நிறைய சாதனைகள் அவர் சென்ற ஆண்டு நிகழ்தினார்.
சென்ற வருடம் கூகிள் தேடல்களில் படங்கள் பிரிவில் இந்திய அளவில் 7 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது மங்காத்தா. அந்த பிரிவில் தமிழில் இருந்து இடம் பிடித்த ஒரே படம் அது மட்டுமே. சென்ற வருடம் ரஜினி , கமல் படங்கள் மட்டுமே வெளிவரவில்லை , அதை தவிர்த்து அத்துணை நடிகர்களின் படங்களும் வெளிவந்திருந்தது. ஆனால் அவர்களின் படங்கள் எல்லாம் இணையதள தேடலில் இடம்பிடிக்க முடியவில்லை
Wednesday, 18 January 2012
பில்லா 2 போஸ்டர் மிக பெரிய ஹிட்
பொங்கலுக்கு பில்லா 2 படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே
அறிவித்திருந்தார்கள். போஸ்டருக்கே பில்டப்பா என்று சொன்னவர்களே
ஆச்சரியப்படும்படி இந்தப் போஸ்டர்களே பிரமாதமாக ஹிட்டாகியிருக்கிறது.
பில்லா இரண்டாம் பாகத்தில் டேவிட் என்ற சாதரண தமிழ் இளைஞன் எப்படி பில்லா என்கிற டானாக மாறினான் என்பதை காட்டியிருக்கிறார்கள். உன்னைப்போல் ஒருவன் சக்ரி டொலோட்டி இயக்கியிருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா இசை.
இந்தப் படத்தின் போஸ்டர்களை ஏற்கனவே அறிவித்தபடி பொங்கலுக்கு வெளியிட்டனர். மங்காத்தாவுக்கு மாறாக இளமையுடன் இருந்த ஆக்ரோஷ அஜீத்தின் புகைப்படங்கள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளன. மங்காத்தாவைவிட பில்லா 2 ஓபனிங் அதிகமாக இருக்கும் என்று இப்போதே திருப்தியில் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு
பில்லா இரண்டாம் பாகத்தில் டேவிட் என்ற சாதரண தமிழ் இளைஞன் எப்படி பில்லா என்கிற டானாக மாறினான் என்பதை காட்டியிருக்கிறார்கள். உன்னைப்போல் ஒருவன் சக்ரி டொலோட்டி இயக்கியிருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா இசை.
இந்தப் படத்தின் போஸ்டர்களை ஏற்கனவே அறிவித்தபடி பொங்கலுக்கு வெளியிட்டனர். மங்காத்தாவுக்கு மாறாக இளமையுடன் இருந்த ஆக்ரோஷ அஜீத்தின் புகைப்படங்கள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளன. மங்காத்தாவைவிட பில்லா 2 ஓபனிங் அதிகமாக இருக்கும் என்று இப்போதே திருப்தியில் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு
Saturday, 14 January 2012
அஜித்தும் கமலும் இணைந்து நடிக்கும் படம்
கூட்டல் கழித்தல் மாதிரிதான் கோடம்பாக்கத்தில் நடைபெறும் முட்டல்
மோதல்களும்! தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் உச்சக்கட்ட ‘மிர்ச்சி’யாக
இருந்தார்கள் அப்படத்தின் ஹீரோவான கமலும், தயாரிப்பாளரான ஆஸ்கர்
ரவிச்சந்திரனும். படத்தின் ரிலீஸ் தேதியை கூட பேப்பர் விளம்பரத்தை பார்த்தே
அறிந்து கொள்ள முடிந்தது கமலால். அப்படியெல்லாம் தள்ளி நின்ற இருவரும்
இப்போது மீண்டும் கை கோர்த்திருக்கிறார்கள்.
இந்த கூட்டணி கூண்டுக்குள் அடைக்கலமாகியிருப்பது கமல் மட்டுமல்ல, ஒரு காலத்தில் ஆஸ்கர் பிலிம்சில் அடுத்தடுத்த படங்களில் நடித்த அஜீத்தும்தான். அந்த நேரத்தில் அஜீத்துக்கும் ஆஸ்கருக்கும் கூட மயிரிழை அளவுக்கு மனக்கசப்பு இருந்தது.
ஒரு சின்ன புன்னகை எல்லாவற்றையும் வென்று விடுமல்லவா? இப்போது மீண்டும் அந்த அதிசயம் நிகழப்போவதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கமல் நடிக்கவிருக்கும் இந்த புதிய படத்தில் ஒரு முக்கியமான ரோலில் அஜீத்தையும் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இவரும் ஆகட்டும் பார்க்கலாம்… என்று கூறியிருக்கிறாராம்
இந்த கூட்டணி கூண்டுக்குள் அடைக்கலமாகியிருப்பது கமல் மட்டுமல்ல, ஒரு காலத்தில் ஆஸ்கர் பிலிம்சில் அடுத்தடுத்த படங்களில் நடித்த அஜீத்தும்தான். அந்த நேரத்தில் அஜீத்துக்கும் ஆஸ்கருக்கும் கூட மயிரிழை அளவுக்கு மனக்கசப்பு இருந்தது.
ஒரு சின்ன புன்னகை எல்லாவற்றையும் வென்று விடுமல்லவா? இப்போது மீண்டும் அந்த அதிசயம் நிகழப்போவதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கமல் நடிக்கவிருக்கும் இந்த புதிய படத்தில் ஒரு முக்கியமான ரோலில் அஜீத்தையும் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இவரும் ஆகட்டும் பார்க்கலாம்… என்று கூறியிருக்கிறாராம்
Friday, 13 January 2012
Monday, 9 January 2012
தோள் கொடுத்த அஜித்
அஜித் அவர்கள் ஒரு பத்திரிக்கை நிரூபர் மரணத்திற்கு அவர் வீட்டுக்கு
சென்றிருந்தார் . பத்திரிக்கை நிரூபரின் வீட்டு வாசல் மிகவும் குறுகலாக
இருந்ததால் நிரூபரை தூக்க யாரும் முன்வரவில்லை முதல் ஆளாக தோல் கொடுத்தது
நம் தல அஜித் அவர்கள் தான்.
அஜித் அவர்களின் இந்த மனித நேயத்தை பாராட்டுவதற்கு நமக்கு வார்த்தைகள் இல்லை . அஜித் அவர்களின் இந்த செயலை அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் தெரிய படுத்துவோம்.
அஜித் அவர்களின் இந்த மனித நேயத்தை பாராட்டுவதற்கு நமக்கு வார்த்தைகள் இல்லை . அஜித் அவர்களின் இந்த செயலை அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் தெரிய படுத்துவோம்.
Sunday, 8 January 2012
அஜித்தைப் பற்றி புகழ்ந்து தள்ளும் விஜய் ப
அஜித் பற்றிய தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார் விஜய். “அஜித்தின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்பவே பிடிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியா செஞ்சு முடிச்சிருவாரு அஜித். என் படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் வரும். ‘நான் ஒரு தடவை முடிவெடுத்திட்டா அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்’னு… இந்த பஞ்ச் டயலாக் எனக்குப் பொருந்துதோ இல்லையோ அஜித்துக்கு நன்றாகவே பொருந்தும்” என்கிறார் விஜய்.
Thursday, 5 January 2012
அஜித் ரசிகர்களுக்கு புதிய பரபரப்பு தகவல்
- அஜித் நடித்த படங்களிலே அதிக வசூல் சாதனை படைத்த படம் மங்காத்தா. இப்போதுள்ள தமிழ் சினிமாவில் இதுவரையில் முதல் போட்டு முதல் கூட எடுகமுடிவதில்லை ஆனால் மங்காத்தா 40 கோடி செலவில் எடுத்தார்கள் அதன் வருமானம் மூன்று மடங்கு 130 கோடி ஆகும். இதுவரயில் அஜித்தின் எந்த படமும் மங்காத்தா அளவிற்கு வசூல் சாதனை படைக்க வில்லை இந்த சாதனையை முறியடிக்க அஜித்தின் வரபோகும் படங்களால் மட்டும் தான் முறியடிக்க முடியும் என்று அஜித்தின் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
Tuesday, 3 January 2012
அஜீத்துடன் நடிக்க அனுஷ்கா மறுப்பு ?
- அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா கால்ஷீட் கிடைக்காததால் வேறு ஹீரோயினை தேடுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ‘பில்லா 2’ படத்தில் அஜீத் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் வேறு படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் தர இயலவில்லை. இதையடுத்து பிரபல நடிகைகளிடம் கால்ஷீட் பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர்.
- ‘பில்லா’ முதல்பாகத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். ‘பில்லா 2’ படத்தையும் அவரே இயக்குவதாக இருந்தது. ஆனால் தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டதால் அந்த வாய்ப்பு கைநழுவியது. தற்போது சக்ரி டுலிட்டி இப்படத்தை இயக்கி வருகிறார். அஜீத், விஷ்ணுவர்தன் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு பிறகு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ‘சிறுத்தை’ ஷிவா இயக்கும் மற்றொரு படத்திலும் அஜீத் நடிக்கிறார்.
அஜித்தின் உயர்ந்த உள்ளத்திற்கு மற்றொரு எடுத்துகாட்டு புதிய தகவல்
அஜித் நடிக்கும் பில்லா 2 வில் கதாநாயகியாக அறிமுகம் ஆகும் பார்வதி ஓமனகுட்டனுக்கு நடிக்க வரவில்லை என்று பில்லா 2 வில் இருந்து தூக்கி விடலாம் என்று பட குழுவினர் எல்லோரும் எண்ணினார்கள் அப்போது நம்முடைய தல அஜித் தான் முதல் படம் தானே நாம் தான் கற்று கொடுக்கவேண்டும் என்று கூறினார். சொன்னது மட்டும் அல்லாமல் நடிப்பதற்கு கற்றும் தந்தார் . அஜித்தின் தீவிர ரசிகர்களாகிய நாம் அவருடைய பெருமைகளை மற்றவர்களுக்கு தெரிய படுத்துவோம் . அணைத்து அஜித் ரசிகர்களுக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள் .
Subscribe to:
Posts (Atom)