- ’பில்லா 2′ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தல அஜித் நடிக்கும் 51-வது படம் ‘பில்லா 2′. பார்வதி ஓமனக்குட்டன் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தை சக்ரி டோலொட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் ‘பில்லா 2′ படத்தின் கலக்கலான போஸ்டர்கள் பொங்கல் தினத்தில் வெளியிடப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- “கையில் துப்பாக்கியுடன் கோபப்பார்வையோடு ‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இறந்த காலம் உண்டு. ஒவ்வொன்றும் வரலாறு’ என்பதை குறிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
- இந்த படத்தில் அஜித் நடிப்பை பற்றி கூறிய இயக்குநர், ‘டேவிட் என்ற சாதாரண மனிதன் தூத்துக்குடியில் இருந்து வந்து டான் பில்லாவாக எப்படி உருவாகிறார் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் அஜித் என்றார். ‘பில்லா 2′ படத்தில் மும்முரமாக நடித்து வந்ததால் அஜித் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. ‘பில்லா 2′ படத்தில் அஜித்தின் பணிகள் முடிந்த பின் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றிருந்தார். தற்போது சிங்கப்பூரில் இருந்து திரும்பி இருக்கும் அஜித், அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, 27 January 2012
பில்லா 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment