- கடந்த 2011 ஆம் ஆண்டின் நம்பர் ஒன் வெற்றி படமாக அமைந்த “மங்காத்தா” வை தொடர்ந்து வெளி வர இருக்கும் தலயின் 51 வது படமான பில்லா 2 பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதோடு,சுமார் 5 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு உரிமையை பெற்று இருக்கிறது G.K Media என்கிற அமெரிக்க நிறுவனம்.
- கமலின் முழு கட்டுப்பாட்டில் இருந்த ‘உன்னை போல் ஒருவன்’ படத்தை இயக்கினாலும், என்னை பொறுத்தவரை சக்ரி டோலேடி அவர்களுக்கு முழு சுதந்திரத்துடன் பணியாற்றிவரும் “பில்லா 2 ” தான் முதல் படம்.
- “II” மட்டுமே தோன்றும் ஒரு லோகோவை முதல் விளம்பர போஸ்டராக போட்டு, அனைவருக்கும் ‘பில்லா 2′ என கொண்டு சென்றது சக்ரிக்கு ஒரு விசிடிங் கார்டு என்று சொல்லலாம்.
- முதல் பாகத்தில் மிகவும் பிரபலமான தீம் இசையை பயன்படுத்தாமல், பில்லாவின் இரண்டாம் பாகத்திற்கு தனிப்பட்ட தீம் இசையை உருவாக்கி வருவதாக கூறி இருக்கிறார் அஜித்தின் லக்கி இசை அமைப்பாளர் யுவன். அடுத்த அஜித்தின் இரண்டு படங்களுக்கும் இவரே இசை அமைப்பாளர் என்றும் தெரிகிறது.
- படத்தின் ஒரு ப்ரோமோ பாடலை இணையத்தில் வெளியிட்டு மற்ற நடிகர்கள் விளம்பரத்திற்கு படாத பாடு பட்டு வரும் இன்றைய டிரெண்டில், மூன்றே மூன்று போஸ்டர்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை படத்திற்கு கொண்டு வர இயலும் என்றால், அது தலைவர் ரஜினிக்கு பின் தலயால் மட்டுமே சாத்தியம். பில்லா 2 படத்தின் ஸ்டில்கள்.
- “பில்லா 2 ஸ்டில்களை பார்த்த பின் படம் வெளிவரும் வரை கட்டுபடுத்திக்கொண்டு காத்திருக்க முடியாது என்று தோன்றுகிறது” என்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
Sunday, 22 January 2012
பில்லா 2 படத்தை கட்டுபடுத்திக்கொண்டு காத்திருக்க முடியாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment