Earn Money 9000 upto.. click it...

Friday, 20 January 2012

வித்தியாசமான அஜித்தை பார்க்க போறிங்க விஷ்ணுவர்தன் பேட்டி!


விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அஜித் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கப்போகிறாராம். இந்த தகவலை டைரக்டர் விஷ்ணுவர்தனே தெரிவித்துள்ளார். பில்லா-2 படத்திற்கு பின்னர் அஜித், விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே பில்லா படத்தின் முதல் பாகம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சிலபல காரணங்களால் பில்லா 2 படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவில்லை. இந்நிலையில் அஜீத் – விஷ்ணுவர்த்தன் ஜோடி மீண்டும் இணைகிறது.
புதிய படம் குறித்து விஷ்ணுவர்தன் அளித்துள்ள பேட்டியில், அஜித் சாரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்த பின்னர்தான் அந்தந்த பாத்திரத்திற்கு யார் பொருந்துவார் என்று தீர்மானிக்கப்படும். அதன் பிறகே அடுத்த கட்ட பணிகள் தொடங்கும். அதற்குள் பல்வேறு விதமாக செய்திகள் உலா வருகின்றன. எதிலும் உண்மையில்லை.
திரைக்கதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால்தான் மற்றவைகளில் கவனம் செலுத்துவோம், என்று கூறியுள்ளார். மேலும், இந்த புதிய படத்தில் அஜித் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment