Earn Money 9000 upto.. click it...

Friday, 20 January 2012

அஜீத்திற்காக..! போர்க்களம் ' பண்டி சரோஜ்குமார்


  • அஜீத்திற்கு அவரது ரசிகர்களைத் தாண்டி, திரையுலகிலும் பல நண்பர்களும் அவரது ரசிகர்களாக இருக்கின்றனர். தமிழ்த் திரையுலகினர் மத்தியில் 'ஜென்டில்மேன்' என்று சொல்லப்படும் அஜீத்திற்கு ஒரு இயக்குனரும் ரசிகராக இருக்கிறார். 

  • ' போர்களம் ' படத்தின் இயக்குனர் பண்டி சரோஜ் குமார்.  

  • அவர் அஜீத்தைப் பற்றி தனது ஃபேஸ்புக் இணையத்தில்  " யாராவது விஜய்யை விமர்சனம் செய்தால் நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன். ஆனால், யாராவது அஜீத்தைப் பற்றி விமர்சனம் செய்தால், அவர்களை எதிர்ப்பேன்.. பதிலடி கொடுப்பேன். அஜீத்திற்காக எந்த எல்லை வரையும் செல்வேன். அஜீத் நேர்மையானவர், எளிமையானவர், துணிவானவர், பொறுப்பானவர். தன்னம்பிக்கையாலும் கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர்.

  • தமிழ் ரசிகர்கள் உள்ளங்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் அஜீத். நடிக்க வரும் எல்லா புதுமுகங்களுக்கும் அவர் முன்மாதிரியாக இருக்கிறார். அவர் பெரிய நடிகர் இல்லை, நன்றாக நடனம் ஆடத் தெரிந்தவர் இல்லை, அவரது சில படங்கள் மட்டுமே பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளன. ஆனாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு அஜீத் தான் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். நீங்கள் திரைத்துறையில் இருந்தால் மட்டுமே அவரது  பெருமைகளை உணர முடியும். நான் அவர் அருகில் இருந்து அவரை ரசித்தவன். " என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment