Earn Money 9000 upto.. click it...

Monday, 26 September 2011

இங்கிலாந்தில் 'தல'யின் மங்காத்தா.....பாக்ஸ் ஆபீசில் 15-வது இடம்...சாதனை!


'தல' அஜித் குமாரின் 50-வது படமான மங்காத்தா இங்கிலாந்தில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித் நடித்த படம் மங்காத்தா தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இங்கிலாந்திலும் மங்காத்தா சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இங்கிலாந்தில் கடந்த 31-ம் தேதி ரிலீஸ் ஆனதில் இருந்து இது வரை ரூ. 1. 24 கோடி வசூல் ஆகியுள்ளது. இன்னமும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் மட்டுமில்லை சிங்கப்பூர், மலேசியா, அமெரி்க்கா உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இங்கிலாந்தில் ரீலீஸ் ஆன முதல் வார இறுதியில் மங்காத்தா பாக்ஸ் ஆபீசில் 15-வது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில் சல்மானின் பாடிகார்டும் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, மங்காத்தாவின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ. 40 கோடியைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment