அஜித்தின் பில்லா-2-வில் ஒரு பாட்டுக்கு மட்டும் கிட்டத்தட்ட 25 நாட்கள் சூட்டிங் நடத்தியிருக்கிறார்களாம். மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, அஜித் நடித்து வரும் படம் "பில்லா-2". படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி என்ற மாடல் அழகி நடிக்கிறார். இப்படத்தை "உன்னைப்போல் ஒருவன்" படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கி வருகிறார். படத்தில் டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக மாறுகிறார் என்பதே கதை. படத்தில் அஜித் மிகவும் இளைமையாக தோன்றப்போகிறார். இதற்காக தனது எடையையும் கனிசமாக குறைத்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 25நாட்கள் சூட்டிங் நடத்தியிருக்கிறார்கள். இந்த பாடல் காட்சியில் அஜித் உள்ளிட்ட நட்சத்திரங்களை ஆட்டி வைத்தவர் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம். ஏற்கனவே வந்த அஜித்தின் பில்லா-வை காட்டிலும், இப்படம் அதிரடியாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் இயக்குநர். இதற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து, பார்த்து எடுத்து வருகிறாராம் சக்ரி டோல்டி.
No comments:
Post a Comment