அஜித்தின் நடிப்பில் ‘பில்லா’ திரைப்படம் அபார வெற்றி பெற்றதால், அதன் இரண்டாவது பாகமான ‘பில்லா 2’ தற்போது படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இரண்டாவது பாகமும் அவர்தான் இயக்குவதாக இருந்தது.
ஆனால் அவர் வேறு படங்களில் பிஸியாகி இருந்ததால், இப்படத்தை இயக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு பிறகு அஜித் யாருடன் இணையப்போகிறார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைதிருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் படம் பண்ண இருக்கிறார். இப்படத்தை பில்லா இயக்குனரான விஷ்ணு வர்தன் இயக்குவார் என தகவல் கிடைத்திருக்கிறது.
No comments:
Post a Comment