|
Add caption |
'மங்காத்தா' படத்தில் நடித்தது பற்றி கூறியிருக்கும் லட்சுமிராய் "முதலில் இயக்குநர் வெங்கட் பிரபு என்னைதான் அஜித்துக்கு ஹீரோயினாக நடிக்க கேட்டார் ஆனால் அக்கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததாலும், நான் தற்போது நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு இரண்டு பாடல்கள் இருப்பதாலும் இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தேன்" என்று கூறியிருக்கிறார். லட்சுமிராய் கருத்துக்கு இயக்குநர் வெங்கட்பிரபு கூறியதாவது: "லட்சுமிராய் மறந்து போய் பேசுகிறார். முதலில் இருந்த கதைப்படி அஸ்வின் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் லட்சுமிராய். அஜித் நடிக்க ஒப்பந்தம் ஆனவுடன் நான் கதையில் நிறைய மாற்றங்கள் செய்து, த்ரிஷாவை அஜித்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்தேன். லட்சுமிராய்க்கு ஏற்கனவே முன்பணம் கொடுத்திருந்ததால், அவர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். த்ரிஷா "இது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. படத்தில் எவ்வளவு பேர் நடித்தாலும், அஜித்திற்கு நாயகியாக யார் நடிக்கிறார்களோ அவர்களைத்தான் விளம்பரத்தில் பயன்படுத்துவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment