Earn Money 9000 upto.. click it...

Friday, 30 December 2011

‘தல’ அஜித் என்றுமே மாறாதவர் : குதூகலத்தில் ரசிகர்கள் !

அஜித் ரசிகர்களின் அரசியல் ஆர்வத்தால் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொல்லை கொடுத்து போஸ்டர்களும் ஒட்டினர் இதனால் கடுப்பாகிய அஜித் ரசிகர் மன்றத்தையே கலைத்து அதிர்ச்சியூட்டினார் அஜீத்.
இதனால் ரசிகர்கள் தங்களை விட்டு தல விலகிப் போகிறாரோ என சந்தேகித்தனர். ஆனால் பில்லா-2 படப்பிடிப்பில் அஜீத் நடத்தைகள் முற்றிலும் மாறாய் இருந்தன. தன்னை பார்க்க வந்த ரசிகர்களை அன்பாக வரவேற்று கலந்துரையாடினார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். தல மாறவில்லை என்று ரசிகர்கள் மகிழ்சியுடன் தெரிவித்தனர்.

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது எதனால்? – அஜீத் புதிய பரபரப்பு பேட்டி !

சென்னை: சினிமாவை தவிர்த்து ரசிகர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். சுதந்திரமான சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மன்றங்களைக் கலைத்தேன், என்கிறார் அஜீத்.
நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கடந்த மே மாதம் கலைத்துவிட்டார். அஜீத் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மன்றத்தை அஜீத் கலைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனாலும் மங்காத்தா படத்துக்கு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டி கொண்டாடினார்கள். மன்றத்தைக் கலைத்ததால் படம் ஓடாது என்று சிலர் கூறி வந்த நிலையில், அதைப் பொய்யாக்கி மங்காத்தா ஹிட் படமாகியுள்ளது.
இந்த நிலையில் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன் என்பது பற்றி அஜீத் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. ரசிகர்கள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியமாக படுகிறது. சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ரசிகர்மன்றத்தை கலைத்தேன்.
எனது முடிவை பலரும் பாராட்டினார்கள். அரசியல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருந்துதான் செய்ய வேண்டும் என்பது அல்ல.
சமூகத்தில் இரண்டு பிரிவு மக்கள் உள்ளனர். ஒரு பிரிவினர் நேரடியாக களம் இறங்குவார்கள். இன்னொரு பிரிவினர் தனி மனிதனாக இருந்து கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்பவர்கள். நான் இதில் இரண்டாவது வகை.
எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. என் சக்திக்கேற்ப மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் இதுபோல் செயல்பட்டால் உலகம் சிறப்பாக மாறும்.
மங்காத்தா படத்தில் நரைத்த தாடியுடன் வந்தேன். பில்லா-2 படத்தில் இளமையாக வருகிறேன்.
இப்படத்துக்கு பின் என் வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பேன்,” என்றார் அஜீத்.

ஹாலிவுட்டை மிரட்டும் வகையில் அஜித்

  • பில்லா 2 திரைப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளில் அஜித் நடிக்கிறார் . இந்த படத்தை சக்ரி இயக்குகிறார் . நடிகையாக பார்வதி ஓமன் நடிக்கிறார் . படத்தின் வில்லனாக போர்ஸ் இந்தி படத்தில் நடித்த வித்யு தெமுவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன . இந்த பில்லா 2 திரைப்படத்தை மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். அதிகமான பொருட் செலவில் சர்வதேச தரத்தில் எடுத்து வருகிறார்கள் . அஜித் எந்த படத்திலும் நடிக்காத அளவு ரிஸ்க் எடுத்து
  • நடித்துள்ளாராம். காட்சிகள் எல்லாம் மிரட்டும் வகையில், ஹாலிவுட் தரத்தில் படம் இருக்கும் , மற்றும் அஜித் பனி மலையில் மோதும் காட்சிகள் மிக பிரமாண்டமாக உள்ளதாம். அந்த காட்சிகள் ரொம்ப சிரமமாக இருந்துதாம். அதை அஜித் கஷ்டப்பட்டு ரொம்ப ஈடுபாடு எடுத்து நடித்தாராம். சரி இவங்க இவ்வளவு சொல்வதை பாரத்தால் நமக்கும் படம் பார்க்கணும் போல் இருக்கு சரி நண்பர்களே திரைக்கு வரும் வை காத்திருப்போம்

பில்லா-2வை கைப்பற்ற போட்டியிடும் நிறுவனங்கள்

 
  • அஜீத் நடிப்பில் வெளிவந்த 50வது படம் ‘மங்காத்தா’. வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்சங்கர்ராஜா இசையமைத்து இருந்தார்.தயாநிதி அழகிரி தயாரித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.அஜீத்துடன் அர்ஜுன், த்ரிஷா, லட்சுமிராய், வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து இருந்தனர். அஜீத்தின் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றது.GOOGLE இணையத்தில் 2011 அதிகமுறை தேடிய இந்தியப் படங்கள் வரிசையில் 7வது இடத்தினை பிடித்தது ‘மங்காத்தா’. படத்தின் மொத்த கலெக்ஷன் என்ன என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடாமல் இருந்தது.இப்போது, சன்பிக்சர்ஸ் நிறுவனம் ‘மங்காத்தா’ படத்தின் மொத்தம் 130 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவித்துள்ளது. மங்காத்தா படத்தின் இந்த கலெக்ஷனால் தமிழ் திரையுலகினரும், அஜீத் ரசிகர்களும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.’மங்காத்தா’ படத்தின் இந்த மெகா கலெக்ஷனால் ‘பில்லா 2′ படத்தின் உரிமையை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறதாம் சன் டி.வி நிறுவனம்.

Wednesday, 28 December 2011

அஜித்தின் ஜோடி அனுஷ்கா சிவா நம்பிக்கை

தமிழ் திரையுலகில் இயக்குனர் சிவா, நாயகி அனுஷ்காவை புகழ்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நாயகன் கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சிவா, தல அஜித் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
எப்போது வேண்டுமானாலும் நடித்து கொடுக்க, அனுஷ்கா இயக்குனர் சிவாவுக்கு வாக்குறுதி கொடுத்திருப்பதாக திரைப்பட வட்டாரம் கூறுகிறது.
இது பற்றி இயக்குனர் சிவா, தமன்னா என்றால் அவர்களுடைய பொறுப்புணர்வு நினைவுக்கு வரும். அனுஷ்கா மேடம் என்றால் திறமையை, தன்னுடைய நடிப்பின் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய நடிகை ஆவார்.
நீங்க எப்போது அழைத்தாலும் நான் வந்து நடிக்கிறதுக்கு தயார் என்று சொல்லியிருக்கிறார்கள். அனேகமாக அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

Tuesday, 27 December 2011

குடும்பத்துடன் சிங்கப்பூரில் அஜித்!

நடிகர் அஜித் 'பில்லா 2' படப்பிடிப்பில் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். படவேலைகள் பாதிக்கு மேல் முடிந்துள்ளன. தற்போது புத்தாண்டு தினத்தையொட்டி படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். இரண்டு வாரங்கள் ஓய்வுக்காக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி ஷாலினியும் மகளும் சென்றனர். மலேசியா, சிங்கப்பூரில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செய்கிறார். சிங்கப்பூரில் புத்தாண்டு தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளார். படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் குழந்தையை அடிக்கடி பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் அஜித்துக்கு இருந்தது. குழந்தைக்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.

Monday, 26 December 2011

ஆசியாவில் முதன் முதலில் அஜீத்தின் பில்லா 2வில் மட்டும் தான் பரபரப்பு தகவல்


  • மங்காத்தா’ படத்தினை தொடர்ந்து ‘பில்லா – 2′ படத்தில் நடித்து வருகிறார் அஜீத், ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தினை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கி வருகிறார். பார்வதி ஒமணக்குட்டன் அஜீத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
  • இப்படத்தில் இருந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளிவராமல் கடுமையான பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
  • ‘பில்லா 2′ குறித்து படத்தின் இயக்குனர் சக்ரி டோல்டி தனது டிவிட்டர் இணையத்தில் ” ‘பில்லா 2′ படத்தினை EPIC கேமிரா மூலம் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். ஆசியாவில் ‘பில்லா 2′ படம் தான் முதன் முதலில் அந்த கேமிராவை பயன்படுத்தி உள்ளது.
  • படத்தின் சண்டைக்காட்சிகள் அனைத்துமே அஜீத் டூப் இல்லாமல் செய்து இருக்கிறார். அவரது உழைப்பு கண்டிப்பாக அஜீத் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும்.
  • ‘பில்லா 2′ படத்தில் யுவன் உழைப்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘பில்லா 2′ படத்தின் பாடல்கள் கண்டிப்பாக வரவேற்பை பெறும் ” என்று தெரிவித்துள்ளார்

Sunday, 25 December 2011

அமைதி காக்கும் அஜீத்

ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத்.
இவரும் கூட ஒரு காலத்தில் நானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர்தான். ஆனால் பின்னாளில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைய எத்தனை பாடுகள் படவேண்டும், எத்தனை வெற்றிகள் தரவேண்டும், அந்த வெற்றிகளின் பிரமாண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து அமைதியாகிவிட்டார் (இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஒரு படத்திலாவது அடிவாங்கினால் போதும் என்கிறார்!)
அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது.
இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான வர்த்தகம் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றன!

Thursday, 22 December 2011

கடும் பாதுகாப்பில் அஜீத்

மங்காத்தா’ படத்தினை தொடர்ந்து ‘பில்லா – 2′ படத்தில் நடித்து வருகிறார் அஜீத், ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தினை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கி வருகிறார். பார்வதி ஒமணக்குட்டன் அஜீத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இருந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளிவராமல் கடுமையான பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ‘பில்லா 2′ படத்தின் கடும் பாதுகாப்பு குறித்து படத்தின் இயக்குனர் சக்ரி டோல்டி சொல்லும் போது ” ‘பில்லா 2′ படத்தில் அஜீத்தின் கெட்டப் மிக முக்கியமான ஒன்று, ஷாருக்கின் டான் 2 ரிலீஸ் ஆவதால் அஜீத்தின் கெட்டப் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது ஆகவே இவ்வளவு கெடுபிடியாக இருக்கிறோம். ஆனால் ஷாருக்கின் டான் 2 க்கும் தலயின் பில்லா 2க்கும் எந்த‌ விதமான சம்பந்தமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

அஜித் மிக நல்ல மனிதர் ஒளிப்பதிவாளர் பாராட்டு

அஜித், பார்வதி ஒமணக்குட்டன் நடிப்பில் தயாராகும் படம் ‘ பில்லா-2′. சக்ரி டொலெட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை இந்துஜா குழுமத்தின் IN Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. ‘பில்லா’ மற்றும் ‘மங்காத்தா’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால், இப்படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
‘பில்லா-2′ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடித்து படக்குழு ஊர் திரும்பிவிட்டது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அங்கு பனிமலையில் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
‘பில்லா-2′ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள ராஜசேகர் ” அஜித்துடன் நான் ‘ரெட்’ படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது எப்படி பழகினாரோ இப்போதும் அப்படியே தான் பழகுகிறார். நடிப்பைப் பொருத்தவரை ‘ரெட்’ படத்தை விட இப்போது நன்றாக மெருகேறி இருக்கிறார். இப்படத்தின் மொத்த காட்சிகளையும் சக்ரி முன்னரே தெளிவாக, தயாராக வைத்திருந்ததால், பட படப்பிடிப்பு வேலைகள் எளிதாக சீக்கிரம் முடிந்தது. ” என்று கூறியுள்ளார்.
படத்தின் படத்தொகுப்பு மற்றும் பிற பணிகள் முடித்து, பொங்கலுக்கு டிரெய்லர் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘பில்லா-2′ 2012 கோடை விடுமுறையின் போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத்தின் பில்லா 2 தேதி அறிவிப்பு

அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் ஷூட்டிங் 100 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது.
மங்காத்தா ரிலீசுக்கு முன்பே, எப்போது தொடங்கியது என்று வெளியில் தெரியாத அளவுக்கு ஆரம்பித்தது பில்லா 2 ஷூட்டிங். விசாகப்பட்டிணத்தில் ஆரம்பித்து, பல பகுதிகளில் விறுவிறுவென படப்பிடிப்பை நடத்தி கிட்டத்தட்ட முடித்தே விட்டனர் இப்போது.
மொத்தம் 93 நாட்கள் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது. 5 நாட்கள் பேட்ச் ஒர்க் நடக்க உள்ளது. ஆக ஷூட்டிங் தொடர்பான வேலைகளுக்கு மொத்தம் 100 நாட்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில், சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை இந்துஜா குழுமத்தின் இன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வமான ஸ்டில்கள் பொங்கலன்று வெளியாகும், ட்ரெயிலர் பிப்ரவரியில் வெளியாகும் என்று இந்துஜா குழுமத்தின் சுனில் கேத்ரபால் தெரிவித்துள்ளார்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், ஏப்ரலில் படம் வெளியாகும் என்றும் இயக்குநர் சக்ரி டோலெட்டி கூறியுள்ளார்.
இந்தப் படத்துக்குப் பிறகு, ஏ எம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்திலும், விஜயா புரொடக்ஷன்ஸின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் அஜீத்.

Wednesday, 21 December 2011

அஜித்திடம் மோத போகும் சூர்யா

விஜய் இன் வேலாயுதம் படத்தோடு தனது 7ஆம் அறிவு படத்தை வெளியிட்டு தோல்வியை தழுவிய சூர்யா.
தனது அடுத்த படமான மாற்றானை அஜித் இன் பில்லா2 வோடு வெளியிட போகிறாராம் .தலயின் படத்தோடு இவரது படம் தாக்கு பிடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Monday, 19 December 2011

பில்லா 2முடிந்தது

The Billa 2 shooting is finally done and dusted. The team has been working hard for 90 days to finish the shooting for the film. Billa 2 was shot in Hyderabad, Goa and Georgia, from where Ajith and his team returned after the final schedule. The climax of the film was shot in Georgia against a backdrop of snow.
Apparently amazing helicopter shots were taken for the climax sequence of the film. Ajith has shed the salt-and-pepper look that he had sported for Mankatha and displays a different look for the film. After a few months of post production work, the film is expected to hit the screens as soon as possible. On the fast pace of the film's completion, cinematographer R. D.
Rajasekar says, "The film's script was finalised by the director Chakri Toleti much before the shooting commenced. That helped the crew, including Ajith, to finish the shooting in a swift span of time.
I have worked with him earlier in Red. He hasn't changed as a human being, but as an actor it's a marvelous makeover from his side." Now its time for Thala to decide on his next!

கூகுளில் அதிகம் தேடப்பட்ட அஜீத் படம்

அஜீத் நடிப்பில் வெளியான 50வது படம் ‘மங்காத்தா’. அஜீத் நடிப்பில் வெளியான அனைத்து படங்களின் வசூல் சாதனையும் ‘மங்காத்தா’ படம் முறியடித்தது.
இந்நிலையில் GOOGLE நிறுவனம் 2011 ஆண்டு தங்களது இணையத்தில் அதிகமுறை தேடப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக தமிழ் படமான ‘மங்காத்தா’ இந்த வரிசையில் 7ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
அஜீத், த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்த இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
GOOGLE படங்களின் வரிசையில் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘பாடிகார்ட்’ முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ‘ ரா.ஒன்’ 2ம் இடத்திலும், ‘ஹாரி பாட்டர்’ 3ம் இடத்திலும் உள்ளன.
மற்றவை
4. டெல்லி பெல்லி
5. இந்தி ‘சிங்கம்’
6. ரெடி
7. மங்காத்தா
8. TRANSFORMERS-3
9. தோக்குடு ( தெலுங்கு )
10. Zindagi Na Milegi Dobara ( இந்தி )
GOOGLE இணையத்தின் தேடலிலும் ‘ மங்காத்தா’ படம் சாதனை படைத்துள்ள விஷயம் அஜீத் ரசிகர்களையும் படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sunday, 18 December 2011

ஹாலிவுட்டை மிரட்டும் வகையில் அஜித்

பில்லா 2 திரைப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளில் அஜித் நடிக்கிறார் . இந்த படத்தை சக்ரி இயக்குகிறார் . நடிகையாக பார்வதி ஓமன் நடிக்கிறார் . படத்தின் வில்லனாக போர்ஸ் இந்தி படத்தில் நடித்த வித்யு தெமுவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன . இந்த பில்லா 2 திரைப்படத்தை மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். அதிகமான பொருட் செலவில் சர்வதேச தரத்தில் எடுத்து வருகிறார்கள் . அஜித் எந்த படத்திலும் நடிக்காத அளவு ரிஸ்க் எடுத்து
நடித்துள்ளாராம். காட்சிகள் எல்லாம் மிரட்டும் வகையில், ஹாலிவுட் தரத்தில் படம் இருக்கும் , மற்றும் அஜித் பனி மலையில் மோதும் காட்சிகள் மிக பிரமாண்டமாக உள்ளதாம். அந்த காட்சிகள் ரொம்ப சிரமமாக இருந்துதாம். அதை அஜித் கஷ்டப்பட்டு ரொம்ப ஈடுபாடு எடுத்து நடித்தாராம். சரி இவங்க இவ்வளவு சொல்வதை பாரத்தால் நமக்கும் படம் பார்க்கணும் போல் இருக்கு சரி நண்பர்களே திரைக்கு வரும் வரை காத்திருப்போம்

Friday, 16 December 2011

அஜித்தை சந்தி்த்த தனுஷ்




தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம் என உலகை தன் பக்கம் திசை திருப்பிய “ ஒய் திஸ் கொலவெறி?” பாடல் இடம்பெற்ற 3 படத்தின் இசைவெளியிட்டை இத்தனை சீக்கிரம் அறிவிப்பார்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சோனி மியூசிக் நிறுவனம் டிசம்பர் 23-ஆம் தேதி 3 படத்தின் இசையை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
இதை அந்தப் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்திருகிறார். ” மிகவும் பிஸியாக பணியாற்றி வருகிறோம். 3 படத்தின் இசை வெளியீட்டு விழாவை மாறுபட்ட விழாவாக நடத்தை திட்டமிட்டு வருகிறோம். 23-ஆம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறும். ” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் அஜித் கலந்து கொள்வது உறுதி தனுஷ் வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது. கொலவெறி பாடலை பாடியபடி தனுஷ், மேடையில் ஆடவும் இருகிறாராம். 3 படத்தில் கொலவெறி உட்பட மொத்தம் 5 பாடல்கள். அதில் ஒன்று தீம் இசையாம். உலக அளவில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட கொலவெறி பாடல்களின் ஆடியோ விஷுவலும் நிகழ்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது!

Thursday, 15 December 2011

அஜீத் ! : சந்தோஷத்தில் சிவா

‘பில்லா 2′ படத்தினைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத்.
விஷ்ணுவர்தன் படத்திற்குப் பிறகு விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தினை ‘சிறுத்தை’ படத்தினை இயக்கிய சிவா இயக்க இருக்கிறார். முதல் படமான ‘சிறுத்தை’ வரவேற்பை பெற்றதை அடுத்து, அடுத்த படமே அஜீத் என்ற மாஸ் ஹீரோவை இயக்க இருப்பதால் டபுள் உற்சாகத்தில் இருக்கிறார் சிவா.
அஜீத்தை இயக்க இருப்பது குறித்து சிவா ” சிறுத்தை படத்தின் வரவேற்பை அடுத்து தமிழில் அஜீத்துடன் இணைந்து இருப்பதால் அப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அஜீத் சார் ஒரு முறை போன் செய்து விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் தான் ஒப்பந்தம் ஆகியிருப்பது குறித்து பேசினார். நான் அவரை பார்க்க சென்றேன். கொஞ்சம் தயக்கத்துடன் தான் சென்றேன். அவர் என்னிடம் நட்போடு பேசினார். என் தயக்கங்கள் உடைந்தன.
அவரிடன் ஒரு கதையின் சுருக்கத்தை மட்டும் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. தற்போது அக்கதைக்கு திரைக்கதை எழுதி வருகிறேன். ஜனவரி மாதம் அஜீத்திடம் முழுக்கதையும் கூறி விடுவேன். நீங்கள் அஜீத்தை ஒரு புதுமையான வேடத்தில் பார்ப்பது உறுதி ” என்று கூறியுள்ளார்.
சிவா இப்போது தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அஜித் எதிர்பார்த்தது போல் வரும் வரை விடுவதில்லை

அஜித் நடிப்பில் சக்ரி டொலட்டி இயக்கி வரும் படம் “ பில்லா-ll “. படக்குழு, படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
அங்கு எடுத்துக்கொண்டிருக்கும் காட்சிகளில் குறிப்பாக கார்,பைக் ஓட்டுவது போன்ற காட்சிகளில் டூப் போடமல் நடிப்பதாகவும், இந்த காட்சிகள் எதிர்பார்த்ததுபோல் வரும் வரை விடுவதில்லை எனவும் படக்குழுவினர் கூறுகிறார்கள். பில்லா- l ல் அஜித் கார் ஓட்டும் காட்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
எனவே பில்லா -ll ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ”மங்காத்தா” படத்திலும் அஜித் டூப் போடாமல் பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 13 December 2011

அஜித்தின் முதல் சுவாரஸ்ய தகவல்கள்





அஜித்குமார் தமிழில் நடிகராக அறிமுகமான முதல் படம் ’அமராவதி”.

இந்த படத்தை தயாரித்தவர் சோழ பொன்னுரங்கம்.இந்த படத்தை இயக்கியவர் செல்வா.இந்த படத்தில் நடித்ததற்கு அஜித் வாங்கிய சம்பளம் 390 ரூபாய்.ஆனால் அவருடைய படத்திலே அவர் மிக பெரிய பெயரை அந்தபடத்தின் பாடல்கள் பெற்று தந்தன.”செய்தி நியூயாழ்.கொம்”
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே, மற்றும் புத்தம் புது மலரே போன்ற பாடல்கள் பிரபலமாக இருந்தன. இந்த படத்திற்கு இசை அமைத்தவர் பால பாரதி.
இந்த படம் ஜீன் மாதம் 4 ஆம் திகதி, 1993ம் வருடம் வெளிவந்தது.
தெலுங்கில் பிரேம புஸ்தகம் படத்தை பார்த்து இந்த படத்தில் ஒரு சின்ன
ரோல் கொடுக்க நினைத்த இயக்குனர், அவரின் திறமையையும்
ஆர்வத்தையும் பார்த்து படத்தின் நாயகன் ஆக்கினார். இது அவருடைய
திறமைக்கு கிடைத்த பரிசு.
யாருடைய துணையும் இல்லாமல் 390 ரூபாய் சம்பளத்துக்கு வந்த அஜித்குமார் அவர்களுக்கு ‘அவர் தனி மனிதன் இல்லை அவருக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு” என்று சொல்லிக் கொள்ளும் அவருடைய ரசிகர்கள் கோடான கோடி

தேசிய விருது வாங்க போகும் ‘தல’


தில், தூள், கில்லி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஒஸ்தி இயக்குனர் தரணியின் அடுத்த படம் ‘வீர வாஞ்சி’ என தெரிவிக்கப்படுகிறது.
தரணியின் இயக்கத்தில் வெளியான ஒஸ்தி எதிர்மறையான பல விமர்சனங்களை சந்தித்தாலும் வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சந்தோசத்துடன் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.
மசாலா படங்களும், ரீமேக் படங்களாகவும் இயக்கிக்கொண்டிருந்த தரணி இம்முறை தேசிய விருது கிடைக்குமளவுக்கான ஒரு சரித்திரப்படத்தை இயக்கவுள்ளாராம். இக்கதை தமிழர்களை தலைநிமிரச்செய்த ஒரு வீரனின் கதை.
தனது அடுத்த படமான வீர வாஞ்சி படத்தின் முக்கிய கதாபாத்திரமான வீரத் தமிழன் வாஞ்சிநாதன் கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்கிறாராம் தரணி.செய்தி நியூயாழ்.கொம்
மேலும் அசோக்கா எனும் சரித்திரப்படத்தில் தல நடித்திருப்பதால் இப்படத்திற்கு அஜித் சரியாகப் பொருந்துவார் என நம்புகிறாராம் தரணி. அத்துடன் இப்படத்தில் அஜித் நடித்தால் நிச்சயமாக அஜித்துக்கு தேசிய விருது கிடைக்கும் என ஒஸ்தியாக கூறியுள்ளாராம் இயக்குனர் தரணி.
அண்மைக்காலமாக அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பாக வெளிவரும் வதந்தியாக இல்லாமல் உறுதியாகுமா இந்த தேசிய விருதுக்கான கனவுப்படம்…

Monday, 12 December 2011

அஜித்தின் போர்ஸ் வில்லன்




பில்லா-2வில் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்பால் நடிக்கிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு அஜித், பிரபு, நயன்தாரா, நமீதா ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப் படம் பில்லா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிப்பில், பில்லா-2 உருவாகி வருகிறது.
அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். விஷ்ணுவர்தனுக்கு பதிலாக சக்ரி டோல்டி இப்படத்தை இயக்குகிறார். ஐ.என்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக வளர்ந்து வரும் நிலையில் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கும் வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்க இருப்பதாக ஐ.என்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
வித்யூத் ஜம்வால் சமீபத்தில் இந்தியில் வெளியான போர்ஸ் படத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு வில்லனாக நடித்தவர். தன்னுடைய 3 வயதிலேயே களரி தற்காப்பு கலையை கற்றுத் தேர்ந்துள்ளார் வித்யூத்.
களரி மட்டுமன்றி ஜிம்னாஸ்டிக், குங்பூ, ஆகிய தற்காப்பு கலைகளையும் பயின்றுள்ளார். மேலும் சில ஆண்டுகள் மொடலிங் துறையிலும் அசத்தியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி வித்யூத் தேசிய ஜிம்னாஸ்ட் சாம்பியனும் ஆவார். இந்தியில் போர்ஸ் படத்தில் வித்யூத்தின், அசத்தலான நடிப்பு அவரை தமிழுக்கு வர வழைத்திருக்கிறது.
இந்தி மட்டுமின்றி தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., உடன் சக்தி மற்றும் ஊசரவள்ளி போன்ற படத்திலும் பணியாற்றி இருக்கிறார்.
தமிழ் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதுவும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார் வித்யூத்.
பில்லா-2 படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் 30நாளும், 2ம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் 39நாளும் முடிந்து தற்போது 3ம் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது என்றுசெய்திகள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ஆரம்பிக்கப்போகும் ‘அஜித்’




அடுத்த ஆண்டிற்கான பார்முலா ஒன் கார் பந்தய போட்டியை அடுத்தாண்டு அக்டோபர் 28 ம் தேதி இந்தியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுடெல்லியில் நடைபெற்ற வேர்ல்டு மோட்டார் ஸ்போர்ட் கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜூன்டாட் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி புதுடில்லி அருகே உள்ள நொய்டாவில் கிரான்ட் பரிக்ஸ் கார் பந்தய போட்டி நடைபெற்றது.முதன்முறையாக இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இதனையடுத்து இந்தாண்டும் இப்போட்டியை இந்தியாவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 20 சுற்றுக்களை கொண்ட இந்தப் போட்டியின் 17வது சுற்று இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
வரும் ஆண்டிற்கான முதல் போட்டி மார்ச் மாதம் 18ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் துவங்குகிறது.சீனா ஸ்பெயின், பக்ரைன் ,கனடா ,இங்கிலாந்து, ஜெர்மனி,ஹங்கேரி பெல்ஜியம் ,சிங்கப்பூர் ஐப்பான் ,கொரியா ,பிரேசில் உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் நரேன் கார்த்திகேயன் மற்றும் நம்ம ‘தல’ அஜித்குமார் மறுபடியும் களம் காண வாய்ப்பு உள்ளதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் சொல்லி வருகின்றன.
இன்று நடிகர் என்பவர் நடித்து முடித்தவுடன் பணத்தை வாங்கிக் கொண்டு அதில் கட்சி,கம்பெனி,கல்யாண மண்டபம்,பீர் பேக்டரி துறக்கிறார்கள்.ஆனால் மட்டும் “இல்லை” எனறு வருபவர்க்கு நம்ம கேப்டனை போல் விரட்டாமல் அன்பால் மிரட்டும் குணம் தலைக்கு மட்டும் தான் இருக்கு.
அக்டோபர் 28-2012 ல் அஜித்குமார் களம் காண வாழ்த்துகிறோம்.
தொடர்ந்து 20 சுற்றுக்களாகவும் இறுதிப்போட்டி நவம்பர் மாதம் 25ம் தேதி வரை பிரேசிலிலும் நடைபெற உள்ளது

Friday, 9 December 2011

நண்பன் படத்தில் பில்லா 2 டிரெய்லர் தல தளபதி அதிரடி முடிவு!


வரும் தைத்திருநாளில் நண்பன் படம் வெளியாகும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
விஜய் ,ஸ்ரீகாந்த் ,ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் நண்பன் படத்தின் இடைவெளியில் பில்லா 2 டிரெய்லர் ஒளிபரப்ப படும் என்று அஜித்தும் விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.
தல தளபதி இருவரும் நல்ல நண்பர்கள்.அதேபோல் ரசிகர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை.ரசிகர்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Thursday, 8 December 2011

மங்காத்தா நூறாவது நாள்


இன்று மங்காத்தா படத்தின் நூறாவது நாள். முன்பெல்லாம் நூறாவது நாள் என்பது சகஜம். இன்று நான்கு வாரங்கள் தாக்குப் பிடித்தால் அது ஹிட். இந்நிலையில் அ‌‌ஜீத்தின் மங்காத்தா நூறாவது நாளை தொட்டிருக்கிறது.

அ‌‌ஜீத்தின் படங்களில் அதிகம் வசூல் செய்த படம் இதுவே. சென்னையில் இப்படம் எட்டு கோடிகளை‌த் தாண்டியது. இது வேலாயுதம் வசூலைவிட அதிகம். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இப்படம் நல்ல வசூலைப் பெற்றது.

‘தல’ அஜித் மீதான விசுவாசத்தை நிரூபித்தார் சிம்பு!


தல அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, நண்பன் படத்தில் நடிக்க மறுத்தார். விஜய் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் சிம்பு ரசிகர்கள் என்னை கோபித்துக் கொள்வார்கள் என்று பகீரங்கமாக ஸ்டேட்மெண்ட் விடுத்து பரபரப்பு கிளப்பினார். ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத விஜய், ஒஸ்தி படத்தின் இசையை வாலியுடன் சேர்ந்து வெளியிட்டார்.
தற்போது அஜித் மீதான தனது விசுவாசத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு அதிரடியான காரியத்தைச் செய்திருகிறார் சிம்பு. அஜீத்தின் – 50-வது படமான மங்காத்தா படம் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியானது. டிசம்பர் 8-ஆம் தேதியாகிய இன்று சிம்புவின் ஒஸ்தி உலகம் முழுவதும் வெளியாகியிருகிறது.

பில்லா 2 படத்தில் ஸ்ரீ சரண்




 
பில்லா 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 40 சதவீதத்துக்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இருந்தும் நடிகர்கள் பலரை இன்னும் தேர்வு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடிகர் ஸ்ரீசரணை பில்லா 2 படத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளனர். இவர் பயணம் படத்தில் தீவிரவாதி யூசுப் கானாக நடித்தவர்.
சக்‌ரி இயக்கிவரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைக்கிறார்