ஆசியாவில் முதன் முதலில் அஜீத்தின் பில்லா 2வில் மட்டும் தான் பரபரப்பு தகவல்
- மங்காத்தா’ படத்தினை தொடர்ந்து ‘பில்லா – 2′ படத்தில் நடித்து வருகிறார்
அஜீத், ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தினை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கி
வருகிறார். பார்வதி ஒமணக்குட்டன் அஜீத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
- இப்படத்தில் இருந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளிவராமல் கடுமையான பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
- ‘பில்லா 2′ குறித்து படத்தின் இயக்குனர் சக்ரி டோல்டி தனது டிவிட்டர்
இணையத்தில் ” ‘பில்லா 2′ படத்தினை EPIC கேமிரா மூலம் படப்பிடிப்பு நடத்தி
வருகிறோம். ஆசியாவில் ‘பில்லா 2′ படம் தான் முதன் முதலில் அந்த கேமிராவை
பயன்படுத்தி உள்ளது.
- படத்தின் சண்டைக்காட்சிகள் அனைத்துமே அஜீத் டூப் இல்லாமல் செய்து
இருக்கிறார். அவரது உழைப்பு கண்டிப்பாக அஜீத் ரசிகர்களிடையே வரவேற்பை
பெறும்.
- ‘பில்லா 2′ படத்தில் யுவன் உழைப்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக
இருக்கிறது. ‘பில்லா 2′ படத்தின் பாடல்கள் கண்டிப்பாக வரவேற்பை பெறும் ”
என்று தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment