- அஜீத் நடிப்பில் வெளிவந்த 50வது படம் ‘மங்காத்தா’. வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்சங்கர்ராஜா இசையமைத்து இருந்தார்.தயாநிதி அழகிரி தயாரித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.அஜீத்துடன் அர்ஜுன், த்ரிஷா, லட்சுமிராய், வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து இருந்தனர். அஜீத்தின் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றது.GOOGLE இணையத்தில் 2011 அதிகமுறை தேடிய இந்தியப் படங்கள் வரிசையில் 7வது இடத்தினை பிடித்தது ‘மங்காத்தா’. படத்தின் மொத்த கலெக்ஷன் என்ன என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடாமல் இருந்தது.இப்போது, சன்பிக்சர்ஸ் நிறுவனம் ‘மங்காத்தா’ படத்தின் மொத்தம் 130 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவித்துள்ளது. மங்காத்தா படத்தின் இந்த கலெக்ஷனால் தமிழ் திரையுலகினரும், அஜீத் ரசிகர்களும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.’மங்காத்தா’ படத்தின் இந்த மெகா கலெக்ஷனால் ‘பில்லா 2′ படத்தின் உரிமையை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறதாம் சன் டி.வி நிறுவனம்.
Friday, 30 December 2011
பில்லா-2வை கைப்பற்ற போட்டியிடும் நிறுவனங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment