விஜயா புரொடக்சனில் அஜீத் நடிக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சிவா தெரிவித்துள்ளார்.
சிவா முதலில் அஜீத்தை சந்தித்து கதை கூறியிருக்கிறார். கதை கேட்ட அஜீத் எதுவும் கூறவில்லையாம். அதேநேரம் இரண்டு நாட்களில் விஜயா புரொடக்சனிலிருந்து அழைத்து, அஜீத் படத்தை நீங்கதான் இயக்குங்க என்று கூறியிருக்கிறார்கள்.
படத்தின் டெக்னீஷியன்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று பொறுப்பை சிவாவிடமே ஒப்படைத்திருக்கிறார். சிறுத்தையின் வெற்றிக்கு காரணமான சந்தானத்தை முதல் வேலையாக படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
No comments:
Post a Comment