ஒரு வருடத்திற்கு முன்னர் “க்ளைமாக்ஸில் விட்ட சங்கிலியன் தொடரை மீண்டும் தொடரப்போகின்றேன்” என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தேன். ஒரு வருடத்திற்கு முன்னர் பதிவுலகில் எனக்கிருந்த நண்பர்களும் இப்பொழுது இருக்கும் நண்பர்களும் முற்று முழுதாக வேறு! இதில் குறிப்பாக பல இந்திய மற்றும் புலம்பெயர்ந்த நண்பர்கள் புதிதாக கிடைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தனிப்பட்ட ரீதியில் பேஸ்புக் மற்றும் மெயிலில் தொடர்பு கொண்டு “அத்தொடரை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து பிரசுரித்தால் என்ன?” எனக் கேட்டிருந்தார்கள்.
அது
சரி, என்று எனக்கும் பட்டது. காரணம், அத்தொடரை சங்கிலியன் வலையில் தான்
நான் தொடர்ந்து பிரசுரித்து வந்தேன். அகசியம் வலைக்கு வருபவர்களில்
கால்வாசி பங்கினர் கூட அங்கு வருவதில்லை. என்னாலும் இரண்டு
வலைத்தளங்களையும் ஒரே நேரத்தில் சம அளவிலான வாசகர்கள் வருமளவிற்கு
கவனத்தில் கொள்ள முடியாது. தவிர, அகசியம் வலையில் சங்கிலியன் தொடரின் முதல்
ஆறேழு அத்தியாயங்கள் மட்டுமே பிரசுரிக்கப்பட்டது. எனவே அகசியத்தில்
சங்கிலியன் தொடர் ஒரு புதியதாகவே இன்றும் தொடரும்.
இன்னொரு
விடயம், பெரும்பாலும் நாளொரு பதிவு எழுதும் நான் இடத்தை நிரப்புவதற்காக
இந்த தொடரை மீள்பதிவாக இடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க. சங்கிலியன்
எனது காப்பி பேஸ்ட் பதிவு என்பதால் அதே நாளில் வேறு பதிவும் சிலவேளைகளில்
எழுதுவேன். வாரம் இரண்டு அத்தியாயங்களை பிரசுரிக்க எண்ணியுள்ளேன்.
நண்பர்களில் சிலர் தங்கள் வலைகளிலும் தொடரை இணைப்புக் கொடுப்பதாக
குறிப்பிட்டார்கள். தூக்கி விட பலர் இருக்கும் போது நான் ஏன் பின் வாங்க
வேண்டும்? தொடர்ந்தும் தொடருக்கான உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறேன்.
ஒரு
நடிகனின் ஒரு படம் வெளியாகிவிட்டால், அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு
மேலோங்கி நிற்கும். அது விஜய் விசயத்தில் தற்போது இல்லாமல் போய் விட்டது.
ஒரு படம் முடிவதற்குள்ளேயே அவரின் அடுத்த படம் முடிந்து விட்டது. வேலாயுதம்
வெளியாக எடுத்துக் கொண்ட கால அளவு ஒரு வருடத்தை விட அதிகம். அதற்குள்
சங்கர் இயக்கிய நண்பன் படம் முடிந்து விட்டது. பாடல்கள் டிசம்பர் முதல்
வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் 2012 பொங்கல்
ரிலீஸ். போக்கிரிக்குப் பிறகு ஒரு அதிரடி பொங்கல் வெற்றிக்காக விஜயும்,
ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். பார்க்கலாம்!
நண்பன்
படத்திற்கு அடுத்ததாக ஆரம்பிக்கப்படப்போவது ஏ.ஆர்.முருகதாஸின் படமா? கௌதம்
மேனனின் படமா என்ற குழப்பம் என்னைப் போல ரசிகர்களுக்கு இருக்கலாம். இம்மாத
இறுதியில் அதற்கான விடை கிடைக்கும் என விஜய் கூறியிருக்கிறார். விஜயின்
அடுத்த படம் என உறுதியாக இருந்த பகலவன் வெறும் பேச்சு வார்த்தைகளுடனேயே
முடியப்போகின்றதோ தெரியவில்லை. 52 ரசிகர்களின் உடல் உறுப்பு தான நிகழ்வில்
கலந்து கொண்ட விஜய் பேசிய வார்த்தைகள் பகலவன் மீது அவ்வளவு ஈர்;ப்பு
தற்போது விஜய்க்கு இல்லை எனத் தெரிகிறது.
ஒரு
பக்கம் விஜய் தரப்பு இப்படி ஆர்ப்பாட்டமாக அடுத்தடுத்த படங்கள் பற்றிய
எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்த மறுபக்கம் எந்தவித ஆர்ப்பாட்டமும்
இன்றி அஜித்தின் பில்லா 2 நகர்ந்துகொண்டிருக்கின்றது. சூட்டிங் நடைபெறும்
இடங்கள், சூட்டிங் ஸ்பொட்டில் அஜித்தின் ஸ்டில்கள் என சில செய்திகள்
வெளிவந்தாலும் படத்தின் உத்தியோக பூர்வ வோல்பேப்பர்களை எங்கும்
காணமுடியவில்லை. வெறும் லோகோ மட்டும் தான் தேடுபொறிகளில் சிக்குகிறது.
தீபாவளி படங்கள் பற்றியே இன்னும் பேசி முடியவில்லை. இந்த நிலையில் மயக்கம்
என்ன? ஒஸ்தி என்பனவும் களத்தில் இறங்கப்போகிறது. கொஞ்சம் லேட்டாக விக்ரமின்
ராஜபாட்டையும் வெளியாகிவிடும். அதற்குள் பொங்கலும் வந்துவிடும். எனவே
ஊடகங்களின் வீச்சு “பில்லா 2” இற்கு குறைந்தளவிலேயே தொடர்ந்தும்
பட்டுக்கொண்டிருக்கும் போல் தெரிகின்றதுவிஜய் – அஜித் சேர்ந்து நடித்தால் என்ன? என்ற ஆதங்கம் என்றுமே எனக்கு
உண்டு. அப்படி ஏதாவது நடக்க கூடிய சாத்தியம் இருந்தால் அவர்களை வைத்து
இயக்கும் இயக்குனரில் இருந்து படத்தைப் பார்க்கும் கடைக்கோடி ரசிகன் வரை
ஒரே திண்டாட்டமாகத் தான் இருக்கும். இது இலகுவில் சாத்தியப்படாத ஒன்று
என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இருவரும் “ஒருவர் படத்தில் இன்னொருவர் ஹெஸ்ட் ரோலில்” ஆவது
வரலாமே! இருவர் படங்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கும், வியாபாரமும்
அதிகரிக்கும். இயக்கும் இயக்குனருக்கும் “சமபாதி” தலையிடி இருக்காது.
பார்க்கும் ரசிகர்களுக்கும் அடி தடி பிரச்சினை இருக்காது!
No comments:
Post a Comment