பில்லா-2வில் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்பால் நடிக்கிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு அஜித், பிரபு, நயன்தாரா, நமீதா ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப் படம் பில்லா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிப்பில், பில்லா-2 உருவாகி வருகிறது.
அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். விஷ்ணுவர்தனுக்கு பதிலாக சக்ரி டோல்டி இப்படத்தை இயக்குகிறார். ஐ.என்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக வளர்ந்து வரும் நிலையில் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கும் வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்க இருப்பதாக ஐ.என்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
வித்யூத் ஜம்வால் சமீபத்தில் இந்தியில் வெளியான போர்ஸ் படத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு வில்லனாக நடித்தவர். தன்னுடைய 3 வயதிலேயே களரி தற்காப்பு கலையை கற்றுத் தேர்ந்துள்ளார் வித்யூத்.
களரி மட்டுமன்றி ஜிம்னாஸ்டிக், குங்பூ, ஆகிய தற்காப்பு கலைகளையும் பயின்றுள்ளார். மேலும் சில ஆண்டுகள் மொடலிங் துறையிலும் அசத்தியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி வித்யூத் தேசிய ஜிம்னாஸ்ட் சாம்பியனும் ஆவார். இந்தியில் போர்ஸ் படத்தில் வித்யூத்தின், அசத்தலான நடிப்பு அவரை தமிழுக்கு வர வழைத்திருக்கிறது.
இந்தி மட்டுமின்றி தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., உடன் சக்தி மற்றும் ஊசரவள்ளி போன்ற படத்திலும் பணியாற்றி இருக்கிறார்.
தமிழ் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதுவும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார் வித்யூத்.
பில்லா-2 படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் 30நாளும், 2ம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் 39நாளும் முடிந்து தற்போது 3ம் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது என்றுசெய்திகள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment