Earn Money 9000 upto.. click it...

Friday, 19 August 2011

ஆகஸ்ட் 30 முதல் அஜித்தின் மங்காத்தா!

அஜீத்தின் 50-வது படமான மங்காத்தா வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

அஜீத், திரிஷா, அர்ஜுன், லட்சுமிராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரபல பன்பலை வானொலியான மிர்ச்சி ரேடியோ நிகழ்ச்சி மூலம் வெளியிடப்பட்டது.

இப்படி வெளியிட்டது தனது வழக்கமான செண்டிமெண்டுகளில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபு. சமீபத்தில் மங்காத்தா பட வெளியீடு குறித்து தெரிவிக்க பத்திரிகையாலர்களை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு, “மங்காத்தா படத்தில் அஜீத் கெட்டவனாக நடித்துள்ளார்.

இந்தக் கதையில் மொத்தம் ஐந்து கேரக்டர்கள். அதில் நான்கு பேர் கெட்டவர்கள். ஐந்தாவது ஆள் ரொம்ப ரொம்ப கெட்டவர்.
எனது படங்களின் கதை கிரிக்கெட்டோடு தொடர்புடையதாகவே இருக்கும்.

சென்னை 28-ல் பசங்களோட ஏரியா கிரிக்கெட்டை சொன்னேன். “சரோஜா”வில் கிரிக்கெட் போட்டி பார்க்க போனவர்கள் கதையை சொன்னேன். “மங்காத்தா”வில் கிரிக்கெட் பின்னால் உள்ள சூதாட்டங்களைச் சொல்லி இருக்கிறேன்.

அஜீத்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் ரேசையும் படத்தில் சேர்த்துள்ளோம். இந்த படத்தின் பாடல்களை யுவன் ஷங்கர் ராஜா பிரமாதமாக கொடுத்துள்ளார். ஹாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமான கெட்டப்பில் சால்ட் ஆண்ட் பெப்பர் லுக்குடன் அஜீத் வருகிறார்.

வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இம்மாதம் 30-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்தப் படத்தில் அஜீத்துக்கு இணையான வேடத்தில் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இது அஜீத்தின் பொன்விழா படம்.

அஜீத்துக்குதான் முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிந்தும் அர்ஜூன் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்,” என்றார். தற்போது மங்காத்தா படத்தை முதல் பிரதி அடிப்படையில் ஜெமினி லேப் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும்.

ஆகஸ்ட் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய தமிழகம் முழுவதும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாகவும் ஃபாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

No comments:

Post a Comment