Tuesday, 30 August 2011
மணி இயக்கத்தில் அஜீத
தமிழ் திரையுலகின் இப்போதைய லேட்டஸ்ட் பேச்சு அஜீத்தை சந்தித்து பேசி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம் என்பது தான்.
'மங்காத்தா' பட பணிகள் முடிந்து விட்டதால் அஜீத் 'பில்லா - 2' படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
'பில்லா- 2' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது இயக்குனர் மணிரத்னம் அஜீத்தை சந்தித்து பேசினராம். இருவரும் சுமார் 2 மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார்களாம். இயக்குனர் மணிரத்னம் படப்பிடிப்பில் ஒரு நடிகரை அவரது படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பேசுவது அபூர்வம்.
'பில்லா - 2' படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் அஜீத் நடிக்கலாம் என்கிறார்கள்.
மணிரத்னம் தற்போது நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் நாயகனாக அறிமுகமாகும் படத்தை இயக்க இருக்கிறார். அப்படத்தை முடித்து விட்டு அஜீத்தை படத்தினை இயக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment