ராஜ் தொலைகாட்சியில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றிய களவானி திரைப்பட இயக்குனர் சற்குணம், எம் ஜி ஆர் பற்றி பேசிய பிறகு நம்ம தல அஜித் பற்றி பேச தொடங்கினார்.
அவர் கூறுகையில், "கலைஞனை தாண்டி ஒரு சிறந்த மனிதர் அஜித். சினிமாவில் எந்தவொரு பின்னணியுமில்லாமல் மிகபெரிய அளவில் சாதனை செய்த ஒரு கலைஞன். விளையாட்டு வீரர் சச்சின் மாதிரி அஜித் சார் தன்னம்பிக்கை மிகுந்த ஒரு மனிதர்."
சற்குணம் அஜித்துடன் கிரீடம் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவராவார். கிரீடம் படத்தின் பொது ஏற்பட்ட சுவாரசியமான தகவல்களை தொலைக்காட்சி வாயிலாக பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில் "தொழில் செய்துகொண்டிருக்கும்போது திடீரென அஜித் சார் வருவார். என் தோல் மீது கரம் போட்டு சாப்பிட்டியா? என்று நலம் விசாரிப்பார். இதுவே போதுமே... ஒரு ENERGY வந்திடும் நமக்கு..." என்றார் சற்குணம்."கிரீடம் சமயம் அஜித் சார்க்கு திடீரென முதுகு வலி ஏற்பட்டது. தாங்க முடியாத வலி. அன்றைக்கு பார்த்து ராஜ்கிரண் சார் அஜித் சாரை அடிக்கிற மாதிரி ஒரு SCENE. தன்னால் படப்பிடிப்பு கெட்டு போககூடாது நான் நடிக்கிறேன் என்று பிடிவாதமாக இயக்குனர் விஜயுடன் பேசிக்கொண்டு இருந்தார்.ராஜ் கிரண் சார் கிட்ட வந்து என்னை அடிங்க சார் என்று கூறினார். இப்படி ஒரு மனிதரை நான் பார்த்ததேயில்லை" என்றார் சற்குணம்.
No comments:
Post a Comment