Earn Money 9000 upto.. click it...

Sunday 14 August 2011

எனக்கு அஜித் சாரை ரொம்ப பிடிக்கும்

பில்லா திரைப்படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் அண்மையில் அளித்துள்ள பேட்டியொன்றில் அவருக்கு அஜித் சாரை ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.





பில்லா 2 படத்தை இயக்குவதற்கு ஆரம்பத்திலிருந்தே மிகவும் ஆர்வம் காட்டி வந்தார் விஷ்ணுவர்தன். ஒரு சில மாதங்களுக்கு முன்பு, பவன் கல்யாண் நடிக்கும் தெலுங்கு படமான "The Shadow" என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு இவரை தேடி வர, அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார். ஆனால், அந்த நேரம் பார்த்து பில்லா 2 ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட இரு படங்களில் ஒன்றை தேர்ந்து எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் விஷ்ணுவர்தன்.

"எனக்கு அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். பில்லா 2 படத்தை இயக்கும் வாய்ப்பு வந்த நேரத்தில் நான் பவன் கல்யாண் நடிக்கும் "The Shadow" என்ற படத்தை ஆரம்பித்துவிட்டேன். இரண்டில் ஒன்றை தேர்ந்து எடுக்க வேண்டிய சூழ்நிலை. எந்த ஒரு ஆண் பின்னாடியும் உறுதுணையாக ஒரு பெண் இருப்பாள். எனக்கு அவ்வாறு இருப்பவள் என் மனைவி. எனக்கு இந்த முடிவை எடுக்க பெரும் உதவியாக இருந்தவள் அவளே" என்றார் விஷ்ணுவர்தன்.

அஜித் ரசிகர்கள் சார்பாக "The Shadow" படத்திற்கு வாழ்த்துக்கள். மீண்டும் தலையுடன் இணைந்து பில்லா போன்ற சிறப்பான படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தருவீர்கள் என்று நம்புகிறோம்.

No comments:

Post a Comment