Thursday, 25 August 2011
Sun pictures & Cloud Nine Movies பெருமையுடன் வழங்கும் மங்காத்தா
மங்காத்தா' படத்தினை தயாநிதி அழகிரியின் 'க்ளவுட் நைன் மூவிஸ்' மற்றும் சன் பிக்சர்ஸ்
இணைந்து வெளியிட இருக்கிறார்கள். ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிட சன் டி.வி நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.
இன்று இரவு 8 மணி முதல் சன் டி.வியில் படத்தை விளம்பரப்படுத்த இருக்கிறார்கள்.
இது குறித்து தயாநிதி அழகரி தனது டிவிட்டர் இணையத்தில் " 'க்ளவுட் நைன் மூவிஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் மங்காத்தா'. இந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 'மங்காத்தா' படத்தின் தியேட்டர் உரிமை மற்றும் டி.வி உரிமை அனைத்தையும் சன் டி.விக்கு கொடுத்து இருக்கிறோம். அவர்கள் படத்தினை சிறப்பாக விளம்பரப்படுத்த இருக்கிறார்கள்." என்று கூறியுள்ளார்.
இயக்குனர் வெங்கட்பிரபு " இதை விட 'மங்காத்தா' படத்தை பெரிதுப்படுத்த முடியாது. தயாநிதி அழகிரி, சன் டி.வி, உதயநிதி ஸ்டாலின் மூவரின் ஒத்துழைப்புடன் படம் வெளிவர இருக்கிறது " என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment