தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி 'மங்காத்தா' வெளியாவதில் இருந்த சிக்கல் பனி போல் விலகிவிட்டது. வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன் நடித்துள்ள படம் 'மங்காத்தா'. இதில் முழுக்க முழுக்க அஜித் வில்லனாக நடித்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே நல்ல லாபம் பார்த்துவிடலாம் என காத்திருந்த தயாரிப்பு நிறுவனத்தின் காதுகளில் விநியோகஸ்தர்களிடம் இருந்து வந்த செய்தி ஒன்று வெந்நீரை ஊற்றியது படத்தை தயாரித்துள்ளது அழகிரியின் மகன் என்பதால், 'அம்மா' தரப்பிலிருந்து 'அன்பு கட்டளை' வந்தால் என்ன செய்வது என்ற பயத்தில் விநியோகஸ்தர்கள் ஜகா வாங்க, சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்தது தயாரிப்பு. ஆனால் தியேட்டர் அதிபர்கள் பக்கத்திலிருந்தும் ஒத்துழைப்பு கிடைக்காதது தயாநிதியை அப்செட்டாக்கியது. இந்த நேரத்தில்தான் யாமிருக்க பயமேன் என உதவிக்கு வந்தது ஜெமினி. க்ளவுட் நைன் பெயரில் ரிலீஸ் செய்தால்தானே சிக்கல். படத்தை எங்கள் பேனரில் வெளியிட்டால் பிரச்சினை இல்லை என்று ஐடியா கொடுத்த ஜெமினி, சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி, குறைந்த விலைக்கு 'மங்காத்தா'வை வாங்கி வெளியிடுகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் என தொடர்ச்சியாக பண்டிகை வருவதால் அந்த நாளில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எது எப்டியோ ரசிகர்கள காக்க வைக்காம சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா.....
No comments:
Post a Comment