அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் தல ஒரு மோட்டார் கார், சைக்கிள் ரேசர் என்பதை அறிவர். இதனை நன்கறிந்த இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா படத்தில் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சண்டைக்காட்சி ஒன்றினை அமைக்க முடிவுசெய்து அதனை தலயிடம் தெரிவித்துள்ளார்.
தலயும் சற்று தாமதிக்காமல் சம்மதிக்க அபார வேகத்தில் இடம்பெறும் இக்காட்சியை படமாக்கினார் இயக்குனர் வெங்கட்.
அஜித்திற்கு பின்னால் ஒருவர் அமர்ந்து பைக்கினை செலுத்துவதைப்போன்று காட்சியை அமைக்க முடிவுசெய்துள்ளார். இக்காட்சியை படமாக்குவதில் பலத்த சவால்களை எதிர்கொண்டாராம் வெங்கட் பிரபு.
ஆனால் தல இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் மிக மிக வேகமாக பைக்கினை ஓட்டிச்சென்றுள்ளார். தல தவறி கீழே விழுந்தால் என்னவாகும் என்று ஒரே பயத்தில் இருந்தாராம் வெங்கட் பிரபு.
இறுதியில், இக்காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டதில் படக்குழுவினருக்கு சந்தோஷமாம். இதில் படப்பிடிப்பாளர்கள் மிகவும் சிரத்தை எடுத்து காட்சியை முடித்துக்கொடுத்தனராம்.
No comments:
Post a Comment