'மங்காத்தா' படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஆகஸ்ட் 12 ) சென்னையில் நடைபெற்றது. அஜீத், த்ரிஷா, லட்சுமிராய், அர்ஜுன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.
விழாவில் வெங்கட் பிரபு பேசிய போது "மங்காத்தா படத்தை முதலில் எனது பசங்களை வைத்தே பண்ணலாம் என்று தான் ஆரம்பித்தேன். தயாரிப்பாளர் துரையிடமும் அதை தெரிவித்து மும்பையில் போய் படப்பிடிப்பு நடத்த இடங்களை எல்லாம் தேர்வு செய்துவிட்டு வந்து விட்டேன்.
விவேக் ஒப்ராய் மற்றும் சத்யராஜ் ஆகியோரை தான் முதலில் நடிக்க வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன். நானும் எனது நண்பனும் ஒரு நாள் காருக்கு STICKER ஒட்ட போய் இருந்தோம். அஜீத் சாரிடம் இருந்து போன் வந்தது.
" என்ன பிரபு.. துரைக்கு படம் பண்ணப் போறதா கேள்விப்பட்டேன். 'மங்காத்தா' தான் படத்தின் தலைப்பாமே.. THE DARK KNIGHT என்ற ஆங்கில படத்தில் வரும் வில்லனை போல் ரோல் ஏதாவது நீ இயக்கும் படத்திற்கு தேவைப்பட்டால் நானே நடிக்கிறேன். அந்த மாதிரி ஏதாவது இருக்கா? " என்றார்.நான் " சார்.. மங்காத்தா படத்தில் ஒரு ரோல் அப்படித்தான் இருக்கும். படத்துல ஐந்து கெட்டவன்கள்.. அதுல ஒருத்தன் ரொம்ப கெட்டவன்" என்றேன். " கண்டிப்பா நான் பண்றேன் " என்று அஜீத் தெரிவித்தார். அப்படித்தான் அஜீத் இந்த படத்திற்கு ஒப்பந்தமானார்.
அடுத்த நாளே இரண்டு பேரும் நேராக துரையை சந்தித்து இப்படத்தை முடிவு செய்தோம். அர்ஜுன் கேரக்டரில் முதலில் நாகார்ஜுன் தான் நடிப்பதாக இருந்தது. அவரிடம் நாங்கள் நடிக்கக் கேட்டிருந்த தேதிகள் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. உடனே அர்ஜுன் சாரிடம் கேட்க அவரும் ஒ.கே சொல்லி விட்டார்.
அர்ஜுன் சாருக்கு கண்டிப்பாக இந்த சமயத்தில் நான் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் அஜீத் சாரின் 50வது படத்தில் கண்டிப்பாக அவருக்கு தான் முக்கியத்துவம் இருக்கும் என்று தெரிந்தும் இந்த படத்தில் எங்களுக்காக நடித்து கொடுத்தார்.
இந்த படத்தில் அஜீத்துக்கு ஜார்ஜ் க்லூனி லுக் வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறிய வாசுகி பாஸ்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அஜீத் சாரிடம் இதை கூறியதும் மிகவும் சந்தோஷப்பட்டார். என்னுடைய உண்மையான லுக்கே இப்படித்தான் என்பதால் டை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
சென்னை 28 படத்தில் யுவனுக்கு ஒரு பைசா கூட கொடுக்கல. அதுக்கு பிறகு சரோஜா படத்துக்கும் அவர் பணம் வாங்கல. ஏன்னா படத்தின் தயாரிப்பாளர் சிவாதான் இவரை முதன்முதலில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அதனால் வாங்கல. கோவா படத்திலிருந்துதான் அவருக்கு சம்பளம்னு கொடுக்க ஆரம்பிச்சோம். இந்த படத்தின் பாடல்களை பிரமாதமா கொடுத்திருக்கும் யுவன், பேக்ரவுண்ட் மியூசிக் போடுற பணியில் இருக்கார்.
இப்போது கூட பில்லா -2 படப்பிடிப்பில் அவரை பார்த்து பேசினேன். அப்போது " பாரு பிரபு தலைக்கு டை எல்லாம் அடிச்சு... . சே... நம்முடைய படப்பிடிப்பு நாட்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது " என்று கூறினார்.
இந்த படம் மூலமாக மகாகவி பாரதியாரின் குடும்பத்தில் இருந்து ஒரு பாடலாசிரியர் அறிமுகம் செய்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
இப்படம் இம்மாத இறுதியில் வெளியிட தேதிகளை தேர்வு செய்து வருகிறோம். " என்று கூறினார்.
No comments:
Post a Comment