Saturday, 20 August 2011
அஜித்துடன் ஜோடி சேரும் பிரேசில் நாட்டு அழகி!!!!!
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் 51- வது படம்தான் ‘பில்லா 2’. இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபத்தில் நடைபெற்று முடிந்தது.
தற்போது இப்படக்குழுவினர் முத்து நகரமான தூத்துக்குடிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அங்குதான் டேவிட்டாக இருக்கும் அஜித் பில்லாவாக மாற்றப்படுகிறாராம்.
இதனால்தான் படக்குழுவினர் இப்போது தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். இதையடுத்து கோவா, பாண்டிச்சேரி மற்றும் ரஷியாவில் உள்ள வோட்கா நகரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் இப்படத்தின் இயக்குனரான சக்ரி டோலட்டி.
இப்படத்தில் இரண்டு கதாநாயகிகளாம். அதில் ஒருவர் தில்லியை சேர்ந்த மாடலான ஹூமா குரோஷி ஆவார். மற்றொருவர் யார் என்ற தகவல் இப்போது கிடைத்திருக்கிறது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியான புருனா அப்துல்லா என்ற கவர்ச்சி பதுமையை மற்றொரு கதாநாயகியாக்கி இருக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment