பில்லா 2 படத்திலிருந்து விஷ்ணுவர்தன் நீக்கப்பட்டு சக்ரி இணைக்கப்பட்டதும், பெரும்பாலான தல ரசிகர்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்தனர். சக்ரி வேண்டாம்... விஷ்ணு மட்டுமே வேண்டும் என்றே முழங்கினர்... மேலும் சிலர் சக்ரி சிறப்பான இயக்குனர்... நம்புங்கள் அவர் சிறந்த படத்தை தருவார் என்றும் போற்றினர்...எல்லாரது விருப்பமும் அஜித் மிகப்பெரிய இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும், பல விருதுகள் பெற வேண்டும் என்பதே... ஆனால் நாம் ஒன்று மட்டும் மறக்க கூடாது...
ஏ ஆர் முருகதாஸ், எஸ் ஜே சூர்யா, சரண், ஏ எல் விஜய் போன்ற இயக்குனர்கள் இன்று வெற்றி இயக்குனர்களாக வளர்ந்து இருகிறார்கள் என்றால் அதற்கு பிரதான காரணம் நம்ம தல... அவர் கொடுத்த முதல் சான்ஸ்... தீனா, வாலி, காதல் மன்னன், கிரீடம் போன்ற படங்களே சாட்சி....
அவர்களுக்கு திறமை இருப்பது வேறு விடயம்... ஆனால் என்ன திறமை இருந்தாலும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் திறமையை எப்படி உலகுக்கு நிரூபிப்பது... அந்த வகையில் நம்ம தலைக்கு ஒரு HATS OFF!!!
நம்ம விஷ்ணு கூட அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்கள் கொடுத்து இருந்தாலும் பில்லா என்ற BLOCKBUSTER படம் கொடுக்க முடிந்தது நம்ம தல கூடத்தான் ...
ஒரு படத்தின் வெற்றி தோல்வியில் இயக்குனர், கதாசிரியர் பெரும் பங்கு ஆற்றுகின்றனர். மறுக்க முடியாது.... ஆனால் ஒரு HIT படத்தை BLOCKBUSTER ஆக மாற்றக்கூடிய ஷக்தி ஒரு சில நடிகர்களுக்கே உண்டு...சக்ரி தொலேதி பற்றி கூறுவதாயின், கமல் ஹாசனின் உன்னை போல் ஒருவன் படத்தில் இயக்குனராக பணியாற்றி உள்ளார். வெளிநாட்டு பல்கலைகழகங்களில் சினிமா தொடர்பான உயர்ந்த கல்வியினை பெற்று உள்ளார்.
நம்ம தல, ஏ ஆர் முருகதாஸ், எஸ் ஜே சூர்யா, சரண், ஏ எல் விஜய் போன்று சக்ரி மீதும் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கி உள்ளார்... ஆகவே ரசிகர்களாகிய நாமும் புதிய இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்து விடுவோமே... "ALL THE BEST CHAKRI !!!"
No comments:
Post a Comment