10-8-2011 அன்று மங்காத்தா இசை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது நாம் அறிந்ததே. இதனை மதுரை தல ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதன்போது குறிப்பிடத்தக்க விடயம் 'மங்காத்தா' படத்தின் பாடல்கள் அடங்கிய சி.டிக்கள் வெளியாகும் முன்பே, பல இணைய தளங்களில் பாடல்கள் வெளியிடப்பட்டன. இதன்போது அஜீத்தின் ரசிகர்கள் அந்த இணையத்தில் இருந்த பாடல்களை நீக்க பெரிதும் உதவியாக இருந்தார்கள் என்று மங்காத்தா படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மங்கத்தா பாடல்கள் அடங்கிய சி.டிக்கள் 100% விற்பனை ஆகியுள்ளதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. மதுரை ரசிகர்கள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. நன்றி ஓர்குட் அஜித் ரசிகர்கள்
No comments:
Post a Comment